Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-11


குறள் 45:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.

அன்பும் அறமுமிங்கே இல்வாழ்வின் நற்பயனும் பண்பென்று மாகும் உணர்.

குறள் 46:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்.

அறநெறி இவ்வாழ்வின் நற்பயனை வேறு நெறிகளேற்றால் காண்போமா? கூறு.

குறள் 47:

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை

இயல்பாக இல்வாழ்க்கை வாழ்வோன் மற்ற முயற்சி உடையோர்முன் ஏறு.

குறள் 48:

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

போற்றும் அறவழியில் மற்றவரை வாழவைப்போர் பற்றற்றோர் நோன்பைவிட மேல்.

குறள் 49:

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

பழியற்ற இல்வாழ்க்கை வாழ்தல் அறமாம்! அழியாப் புகழ்தரும் வாழ்வு.

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

இல்லறத்தில் நல லறத்தைப் போற்றியே வாழ்பவன் தெய்வப் பிறவிதான் இங்கு

(தொடரும்) 

 


Post a Comment

0 Comments