
லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
பலர் காயமுற்றனர்.
காயமுற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சு கூறியது.
லெபனானில் ஆகப்பெரிய பாலஸ்தீன அகதிகள் முகாமான ஐன் அல்-ஹெல்வெயில் (Ain al-Helweh) அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹமாஸ் ராணுவத்தளத்தைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியது.
லெபனானில் உள்ள பாலஸ்தீன முகாம்களில் ராணுவத் தளங்கள் ஏதும் இல்லை என்றும் இஸ்ரேல் பொய் சொல்கிறது என்றும் ஹமாஸ் குறிப்பிட்டது.
தாக்கப்பட்ட கட்டடத்தில் தீயணைக்கும் பணியில் தீயணைப்பாளர்கள் ஈடுபட்டிருந்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சென்ற ஆண்டு (2024) நவம்பர் மாதம் இரு தரப்புக்கும் இடையே சண்டைநிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்பும் இஸ்ரேல் தொடர்ந்து லெபனானைத் தாக்குகிறது.
ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்துவதாக இஸ்ரேல் வழக்கமாகக் கூறுவதுண்டு.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments