Ticker

6/recent/ticker-posts

1MDB மோசடி: Standard Chartered வங்கிக்கு எதிராக $3.52 பில்லியன் வழக்கு


சிங்கப்பூர் நீதிமன்றம் Standard Chartered வங்கிக்கு எதிராக 2.7 பில்லியன் டாலர் மதிப்பிலான வழக்கைத் தொடுக்க அனுமதி அளித்திருக்கிறது.

மலேசியாவில் நடந்த 1MDB மோசடியில் பங்கு வகித்ததாக வங்கி மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்க வழக்கு தொடுக்கப்படுகிறது.

வழக்கு தொடர்வதை நிறுத்த வங்கி விண்ணப்பித்திருந்தது. அதை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

Standard Charteredஇன் ஈடுபாட்டால் பத்தாண்டுக்கு முன்பு 3.52 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி இழப்பு நேர்ந்ததாக வழக்கைத் தொடுத்தவர்கள் கூறுகினறனர்.

நீதிமன்றத்தின் முடிவு மலேசிய மக்களின் சொத்துகளை மீட்க உதவும் என்றும் அவர்கள் கூறினர்.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக வங்கி கூறியது.

nambikkai

 


Post a Comment

0 Comments