Ticker

6/recent/ticker-posts

இந்தியாவுக்கு ரூ.800 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் விற்க முடிவு.. ஒப்புதல் அளித்தது அமெரிக்கா!


இந்தியாவுக்கு 800 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

ஜாவிலின் ஏவுகணை அமைப்பு மற்றும் எறிகணைகள் ஆகிய இரு ஆயுத தொகுப்பை இந்தியாவுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இலக்கை துரிதமாகவும் துல்லியமாகவும் தாக்கி அழிக்கவும், மனிதர்களால் எளிதில் கையாளக்கூடியதாகவும் உள்ள ஜாவிலின் வகை FGM-148 ஏவுகணை, இலகுரக கட்டளை அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்கள் முதல் கட்டமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து 2 ஆவது கட்டமாக 417 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட எறிகணைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆயுதத் தொகுப்பு ஒப்பந்தம் இந்தியா - அமெரிக்கா இடையிலான வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக ரஷ்யா மற்றும் இஸ்ரேலிடம் ஆயுத கொள்முதலை மேற்கொண்டு வந்த மத்திய அரசு, வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து அமெரிக்காவிடம் 800 கோடி ரூபாய் மதிப்பில் ஆயுதம் வாங்க முன்வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

news18

 


Post a Comment

0 Comments