
ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் வென்று சாதனை படைத்தது. லீக் சுற்றில் 3 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த இந்தியா முக்கிய நேரத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து செமி ஃபைனலுக்கு சென்றது. அங்கே 7 முறை உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்றது.
குறிப்பாக ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன்களை திருப்பி அடித்த ஐசிசி உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் அதிகபட்ச கோரை வெற்றிகரமாக சேசிங் செய்து உலக சாதனையும் படைத்தது. இறுதியில் நவி மும்பையில் நடைபெற்ற ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று இந்தியா புதிய சாதனை படைத்தது.
அதற்காக ஐசிசி சார்பில் இந்திய அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் சுமார் 40 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. இது போக உலகின் பணக்கார வாரியமாக கருதப்படும் பிசிசிஐ தங்களுடைய மகளிரணிக்கு 51 கோடி ரூபாய் பரிசாக அறிவித்தது. அந்த வகையில் மீண்டும் ஒருமுறை ஐசிசியை விட பிசிசிஐ இந்திய அணிக்கு அதிக பரிசுத்தொகையைக் கொடுத்துள்ளது.
அப்படி ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆகிய 2 வாரியங்களிடமிருந்து இந்திய மகளிரணி மொத்தம் 91 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக பெற உள்ளது. அந்தத் தொகை வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் குழுவிற்கு பங்களிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட உள்ளது. இது மட்டுமின்றி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் இருக்கும் ராஜ்ய சபா எம்பி கோவிந்த் தொலாகியா இந்திய வீராங்கனைகளுக்கு வைர நகைகளை பரிசாக கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சூரத் நகரில் ஸ்ரீராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற பிரபல நகை தயாரிக்கும் நிறுவனத்தை வைத்துள்ள அவர் இந்திய வீராங்கனைகளின் பங்களிப்பை பாராட்டும் வகையில் வைர நகைகளை பரிசாக கொடுக்க உள்ளார். அது மட்டுமின்றி அவர்களுடைய வீடுகளுக்கு இலவசமாக சூரியசக்தி மின்சார அமைப்பை உருவாக்கிக் கொடுக்கவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவற்றை செய்வதற்காக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் கோவிந்த அவர்கள் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இது போக தங்களது மாநிலத்திலிருந்து சென்று உலகக் கோப்பை வெல்ல உதவிய ரேணுகா சிங்கிற்கு ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் 1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், அமன்ஜோத் கௌர் ஆகியோருக்கு பஞ்சாப வாரியம் தலா 11 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளது. ஃபீல்டிங் பயிற்சியாளர் முனீஸ் பலிக்கு (பஞ்சாப்) 5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments