Ticker

6/recent/ticker-posts

சிங்கப்பூரில் குறுந்தகவல் மோசடி: தடுக்க Apple, Google நிறுவனங்களுக்கு உத்தரவு


அரசாங்க அமைப்புகளைப் பிரதிநிதித்தி அனுப்பப்படும் குறுந்தகவல்களைத் (SMS) தடுக்க சிங்கப்பூர்க் காவல்துறை Apple, Google நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (நவம்பர் 30) இரு நிறுவனங்களும் தடுப்புகளை அவற்றின் குறுந்தகவல் சேவைகளில் பொருத்தவேண்டும்.

அரசாங்க அமைப்புகளிலிருந்து நேரடியாக வரும் குறுந்தகவல்கள் "gov.sg" என்ற பெயரைக் கொண்டுள்ளன. போலித் தகவல்களிலிருந்து உண்மையான தகவல்களைக் கண்டறிய அது உதவுகிறது.

ஆனால் அது Appleஇன் iMessage சேவையிலும் Googleஇன் Google Messages சேவையிலும் இன்னும் நடப்புக்கு வரவில்லை.

இதுவரை SingPost அமைப்பைப் பிரதிநிதித்தி 120க்கும் அதிகமான மோசடித் தகவல்கள் அனுப்பப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

அத்தகையச் சம்பவங்களைத் தவிர்க்க, பாதுகாப்பு அம்சங்களைக் குறுந்தகவல் சேவைகளில் பொருத்தும்படி காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரவுக்கு இரு நிறுவனங்களும் இணங்கியிருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

nambikkai

 


Post a Comment

0 Comments