
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக சில வீரர்களை டிரேடிங் முறையில் வாங்க பல்வேறு அணிகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோஹித் சர்மாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் காணப்பட்டன.
5 கோப்பைகளை மும்பைக்கு வென்று கொடுத்த ரோஹித் சர்மா வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்ட மும்பை அவரை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டதை மறக்க முடியாது.
அத்துடன் கடந்த வருடம் ரோஹித் சர்மாவை மும்பை அணி இம்பேக்ட் வீரராக பயன்படுத்தி ஃபீல்டிங் செய்யும் இன்னிங்ஸில் பெஞ்சில் அமர வைத்தது. எனவே உங்களை அவமானப்படுத்தும் மும்பையிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு விளையாடுங்கள் என்று ரோஹித் சர்மாவை பலரும் கேட்டுக் கொண்டனர். அதற்கிடையே 2024 சீசனில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பயிற்சி எடுத்த போது ரோஹித் தம்முடைய நண்பரான அபிஷேக் சந்தித்து ரோஹித் பேசினார்.
அப்போது மும்பையில் தாம் விரும்பியது போல் இல்லை என்று கொல்கத்தா பேட்டிங் பயிற்சியாளரான அபிஷேக் நாயரிடம் அவர் பேசிய வீடியோ வைரலானது. அப்போதிலிருந்தே மும்பை அணியிலிருந்து ரோஹித் வெளியேறி கொல்கத்தாவுக்கு விளையாட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டது. அதற்குத் தகுந்தார் போல் இந்திய அணியிலிருந்த கழற்றி விடப்பட்ட அபிஷேக் நாயர் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக செய்திகள் உள்ளது.
அதற்கு முன் ரோஹித் சர்மாவை டிரேடிங் முறையில் கொல்கத்தா அணிக்கு அழைத்துச் செல்வதற்கான பேச்சுவார்த்தைகளை அவர் வெற்றிகரமாக நடத்தி முடித்ததாக செய்திகள் வெளியானது. அதைப் பார்த்த கொல்கத்தா ரசிகர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறிய பின் தரமான கேப்டன் இல்லாததால் ரோஹித் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் அந்த அனைத்து செய்திகளையும் மும்பை இந்தியன்ஸ் மறுத்துள்ளது.
இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் மும்பை அணி. “சூரியன் நாளை மீண்டும் உதிக்கும் என்பது நிச்சயம். ஆனால் நைட்டில் (இரவில்) அல்ல” என்று ரோஹித் சர்மாவின் பிரபல வார்த்தைகளை பதிவிட்டு கொல்கத்தா ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பல்ப் கொடுத்துள்ளது. அதாவது ரோஹித் சர்மா எனும் சூரியன் (கொல்கத்தா “நைட்” ரைடர்ஸ்) இரவில் (நைட்டில்) உதிக்க மாட்டார் என்று மும்பை தெரிவித்துள்ளது. அதனால் கொல்கத்தா ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments