Ticker

6/recent/ticker-posts

மர்ம போத்தலில் தாய்க்குக் கடிதம்... முதல் உலகப் போரைச் சேர்ந்ததா?


சுமார் 100 ஆண்டுக்கு முன்பு ஆஸ்திரேலிய ராணுவ வீரர் தமது தாய்க்கு எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி போத்தலுக்குள் இருந்த அந்தக் கடிதம் ஆஸ்திரேலியாவின் வார்டன் கடற்கரையில் கரையொதுங்கியது.

1916ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ராணுவ வீரர் மால்கம் அலெக்சாண்டர் நெவில் (Malcolm Alexander Neville) அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார்.

அப்போது முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது.

உணவு நன்றாக இருப்பதாகவும் பொழுதை நன்றாகக் கழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடிதத்தைக் கண்டுபிடிப்பவர் அதைத் தமது தாயிடம் ஒப்படைக்குமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

1917ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் பிரான்ஸில் கொல்லப்பட்டார்.

அப்போது அவருக்கு வயது 28.

கடற்கரையில் குப்பை சேகரித்துக்கொண்டிருக்கும்போது டெப்ரா பிரவுன் (Debra Brown) அந்தக் கடிதம் இருந்த போத்தலைக் கண்டுபிடித்தார்.

seithi

 


Post a Comment

0 Comments