
பாதாள உல கும்பலுக்கு எதிரான விசாரணையின் போது ஏதோ ஒரு இடத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் தொடர்புபட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பேரழிவை தோற்கடிக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கை செயற்றிட்டம் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்றைய தினம் (30) ஆரம்பிக்கப்பட்டபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“போதைப்பொருளை ஒழித்துக்கட்ட முடியும் என்ற பாரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. இதை தோற்கடிக்க வேண்டுமென்றால் பொலிஸ் துறையை சுத்தம் செய்ய வேண்டும்.
பொலிஸில் அதிகமாக பணி நீக்கம் செய்யப்பட்ட யுகம் இதுவாகும்.
உங்களது தொழிலையும் சீறுடையின் கௌரவத்தையும் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்லுங்கள்.
இல்லையென்றால் விலகிச் செல்லுங்கள்.
அதுவும் இயலாது என்றால் நாங்கள் உங்களை பதவிகளில் இருந்து நீக்குவோம்” என்று ஜனாதிபதி எச்சரித்தார்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments