
வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணியானது வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஏற்கனவே சில்ஹெட் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தியது.
இதன்மூலம் இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் (1-0) என்ற கணக்கில் வங்கதேச அணி முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நவம்பர் 19-ஆம் தேதி டாக்கா நகரில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடி வரும் பங்களாதேஷ் அணியானது தங்களது முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியில் வங்கதேச அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹீம் 99 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் அந்த அணியின் அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹீம் பங்களாதேஷ் அணி சார்பாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதாவது கடந்த 2005-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் இன்றைய போட்டியுடன் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
இப்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிராக நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையை ரஹீம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அந்த அணிக்காக விளையாடி வரும் அவரின் பங்களிப்பை பாராட்டி அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் அவருக்கு 100 என்ற எண் பொறிக்கப்பட்ட சிறப்பு தொப்பியை வழங்கி அவரது நூறாவது டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments