Ticker

6/recent/ticker-posts

பாரியளவான போதைப்பொருளுடன் பத்மேவின் சகாக்கள் கைது


வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தை பிரதேசத்தில் மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரோடு பிடுங்கி எறிவதற்கான அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டமான 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் கீழ் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன்படி, நேற்று (30) மாலை மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரனும் எனக் கூறப்படும், தற்போது தடுப்புக் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் மூன்று சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 21 மற்றும் 28 வயதான வத்தளை பல்லியவத்தை, அவரக்கொட்டுவ மற்றும் கலகஹதுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிலோ 165 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவு பெறப்படவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

adaderanatamil

 


Post a Comment

0 Comments