
மலேசியாவுக்குச் செல்லும் வாகனங்கள் VEP எனும் வாகன நுழைவு அனுமதி இல்லாவிட்டால் அபராதம் அனைத்தையும் கட்டாமல் மலேசியாவை விட்டு வெளியேற முடியாது.
இம்மாதம் 15ஆம் தேதி இந்தப் புதிய நடைமுறை நடப்புக்கு வரும்.
மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை அந்த மாற்றத்தை இன்று அறிவித்தது.
மலேசியா ஜொகூர் மாநிலத்தில் மட்டுமின்றி மற்ற பகுதிகளுக்கும் VEP பதிவு முறையை அறிமுகம் செய்ய விரும்புகிறது.
தனியார் வாகனங்களும், நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களும் விதிமுறைக்குக் கட்டுப்பட வேண்டும் என்று மலேசியா வலியுறுத்தியது.
VEP இல்லாவிட்டாலும், பதிவு காலாவதியாகிவிட்டாலும் அல்லது பதிவு நிறைவு பெறாமல் பாதியில் நின்றாலும் நடவடிக்கை உண்டு என்று மலேசியப் போக்குரவத்துத் துறை கூறியது.
ஜூலை முதல்தேதி VEP நடப்புக்கு வந்தது. அதுமுதல் இதுவரை நாலாயிரத்துக்கும் அதிகமானோர் சுமார் ஒன்றே கால் மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியிருக்கின்றனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments