
இந்தியாவிடம் அதிகம் கடன் வாங்கிய 7 நாடுகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
1.வியட்நாம்: இந்தியாவிடம் இருந்து அதிகம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் வியட்நாம் 7வது இடத்தில் உள்ளது. அந்நாடு சுமார் ரூ.4,175 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
2.மாலத்தீவு: இந்தியாவிடம் இருந்து அதிகம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தில் மாலத்தீவு உள்ளது. இந்நாட்டு சுமார் ரூ. 5000 கோடி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
3.நேபாளம்: இந்தியாவிடம் இருந்து நேபாளம் சுமார் ரூ. 5800 கோடி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் மின்சார உற்பத்தி, சாலை மேம்பாடு போன்றவற்றுக்காக கடன் வாங்கியுள்ளது.
4.மொரீஷியஸ் தீவு: இந்த பட்டியலில் மொரீஷியஸ் தீவு 4வது இடத்தில் உள்ளது. அந்நாடு சுமார் ரூ. 8350 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.
5.ஆப்பிரிக்கா நாடுகள்: இந்தியாவிடம் மொசாம்பிக், சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகள் கடன் வாங்கி உள்ளது. அந்நாடுகள் சுமார் ரூ. 83000 கோடி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.ம்
6.இலங்கை: இந்தியாவிடம் கடன் அதிகம் வாங்கிய நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்நாடு ரூ. 33,400 கோடி கடன் வாங்கி உள்ளது.
7.வங்கதேசம்: இந்தியாவிடம் அதிகம் வாங்கிய நாடுகளின் பட்டியலில் வங்கதேசம் முதல் இடத்தில் உள்ளது. அந்நாடு மின் உற்பத்தி, கட்டுமான பணி போன்றவற்றுக்காக ரூ. 61,400 கோடி வாங்கியதாக சொல்லப்படுகிறது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments