
யுனைட்டட் ஏர்லைன்ஸ் (United Airlines) விமானப் பயணி ஒருவர் சிப்பந்திகளைக் கடித்து உதைத்ததற்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இம்மாதம் 8ஆம் தேதி இத்தாலியின் மிலான் (Milan) நகரிலிருந்து அமெரிக்காவின் நியூ ஜெர்சி (New Jersey) நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் சம்பவம் நடந்தது.
நிலைமை மோசமடைந்ததால் விமானம் அவசரமாக மெயின் (Maine) மாநிலத்தின் பேங்கோர் (Bangor) விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பயணியை அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.
என்ன நடந்தது?
பயணி 37 வயது ரஷ்யப் பெண் கிறிஸ்ட்டினா கெடிஷேவா (Kristina Kedysheva) என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
அவர் முதல் வகுப்பில் (first class) பயணம் செய்துகொண்டிருந்தார்.
அவர் பல முறை மதுபானம் அருந்தியதாகச் சிப்பந்திகள் கூறினர்.
அதனால் கிறிஸ்டினா மீண்டும் மதுபானம் கேட்டபோது சிப்பந்தி தர மறுத்தார்.
ஆத்திரம் அடைந்த கிறிஸ்ட்டினா சிப்பந்திகளைத் தாக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
கட்டுப்படுத்த முயன்ற சிப்பந்தியின் வயிற்றில் கிறிஸ்டினா உதைத்தார்.
சிப்பந்தி ஒருவரின் மணிக்கட்டை அவர் கடித்ததாகவும் கூறப்படுகிறது.
கிறிஸ்ட்டினா தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
விமானச் சிப்பந்திக்கு இடையூறு விளைவித்தது, தாக்கியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments