Ticker

6/recent/ticker-posts

நலம் வாழ -மருத்துவப் பகுதி-50


கருவுற்றிருக்கும் பெண்களுக்கு 
 கர்ப்ப காலத்தில் ஏற்படும்  பிரச்சனைகளும் அதற்கான  தீர்வுகளும்.

1. கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவது ஆபத்தானது. அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவதால் கருச்சிதைவு மற்றும் கர்ப்பப்பை கீழிறங்கும் அபாயம் உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு கவனத்துடன் இருத்தல் அவசியம்.
2. கர்ப்பிணி பெண்கள் நெல்லிக்காய், முருங்கைகாய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால் கைகால் வீக்கம் வராமல் பார்த்து கொள்ள முடியும். இதனுடன் கருவுற்ற  தாய்மார்கள் சாப்பிட சிறந்த பழம் மாம்பழம். இதனால் பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் காணப்படும்.
 
3. ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதம் சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும். மேலும் கருப்பை குறைபாடுகளை தவிர்க்க பருத்தி இலைசாறை தேனுடன் கலந்து சாப்பிடல் பெண்களின் கருப்பை குறைப்பாடுகள் நீங்கும்.
 
4.கருவுற்ற பெண்களுக்கு முதல் திங்களில் அடிவயிற்றில் சிறுகச்சிறுக வலி இருந்தால் அவர்களுக்கு தாமரைப்பூ, சந்தனம், விலாமிச்சை வேர் சம அளவு எடுத்து கல் மண் நீக்கி நீர்விட்டரைத்து பசும்பாலில் தினம் ஒருவேளை மூன்று நாள் கொடுக்க நீங்கும்.
 
5. கருவுற்றிருக்கும் பெண்கள் எள் உருண்டை, அன்னாசிப்பழம், பப்பாளி பழம், கருஞ்சீரகம், வெல்லம் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக வெப்பம் தரும் பொருட்களை உண்பதால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு கூறப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின்படி கேட்டு நடப்பது அவசியம்.
 
6. ஆறாவது திங்களில் கருப்பைச் சுற்றிலும் சுழன்று சுழன்று வலித்தால், சிறுநீரும் சரியாக கழியாதிருந்தால், திப்பிலி முந்திரிப்பழம், நெய்தற் கிழங்கும் ஓரளவு எடுத்து பசும் பாலில் அரைத்துக் கொடுக்க வேண்டும்.அவ்வாறு செய்யும்போது சிறுநீர் ஒழுங்காக வெளியேறும்.
 
7. கருவுற்றிருக்கும் காலத்தில் வாந்தி ஏற்படுவதுண்டு, அவற்ற்றை தடுக்க, லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தி மட்டுபடும். இதனால் உணவு உண்பதற்க்கு ஏதுவாகும்.
 
8. கர்ப்பிணி பெண்கள் தினசரி இரண்டு நெல்லிக்காய் சாப்பிட வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கு டானிக்காக பயன்படுகிறது. மேலும் தினமும் பேரீச்சம் ப்ழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நன்கு இருக்கும். குழந்தை பிறப்பதற்கு முன்னும் பிறந்த பின்னும் இதனை கடைப்பிடிக்கலாம்.
 
9. ஆரம்ப கர்ப்ப சிதைவை தடுக்க அத்திபழம், தேன் சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொண்டால் கர்ப்பசிதைவை தடுக்கலாம். பத்தாம் மாதம் ஏற்படும் பண்களுக்கு பேறுக்கால வலி தீர முருங்கை இலை ஒரு கைப்பிடி, பத்து கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் பேறு காலவலி குறையும்.
 
10. கருவுற்றிருக்கும் பெண்கள் அதிக இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். தினமும் சிறிதளவு நடைப்பயிற்சி, நல்ல இசை, ஊட்டசத்துள்ள உணவு வகைகள் முதலியவற்றை எடுத்து கொள்ளுதல் அவசியம்

முதல் மூன்று மாதங்களில் உடலையும் மனதையும் தேவை இல்லாமல் வருத்திக் கொள்ளக்கூடாது.

  • வாந்தி வருவதைத் தவிர்க்க அடிக்கடி சிறிய இடைவெளிகளில் சாப்பிட வேண்டும்.
  •  தொற்று நோய்த் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
  •  தொலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
  •  மிகவும் சோர்வு ஏற்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்ய வேண்டாம்.
  •  தாயின் கவனம் முழுக்க கருவில் வளரும் தன் குழந்தையின் மீது இருப்பது நலம்.
  •  இரவுப் பணி செய்பவர்கள், பணி நேரத்தை அவர்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்வது நலம். முதல் மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை. இந்த நேரத்தில் எல்லாவிதத்திலும் விழிப்பு உணர்வுடனும், பாதுகாப்பு உணர்வுடனும் தாய் இருக்க வேண்டும்.
  • சளி, காய்ச்சல் என ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மகப்பேறுமருத்துவர் அல்லாமல் பொது மருத்துவரிடம் காண்பிக்க நேர்கையில், தான் தாய்மை அடைந்திருப்பதாகச் சொல்ல வேண்டும். அந்தப் பொது மருத்துவர் அதற்கேற்றபடியான மருந்துகளைப் பரிந்துரை செய்வார்.
  • நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள் அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.
  • முதல் மூன்று மாதத் தாய்மையில் கம்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வது நல்லது அல்ல. சேரில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி சிறிது தூரம் நடந்து வர வேண்டும். கனிப்பொறியில் இருந்து வெளிப்படும் கதிர்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது இல்லை.
  • வலியோ, லேசாக ரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகவேண்டும். லேசாகத்தானே இருக்கிறது என்று அலட்சியப்
 படுத்திவிடக் கூடாது.

கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது?

குழந்தையின் எடை அதிகரிக்கும்போது அது அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களை அழுத்தும். அதில்  அழுத்தப்படும் போது கால் வீக்கம் ஏற்படுகிறது.

பாதங்களிலிருந்து இரத்தத்தை மேல எடுத்து செல்லும். இப்போது அழுத்தினால் அது சரியாக இரத்தத்தை மேலே கொண்டு செல்ல முடியாது. எனவே இரத்தம் காலில் தேங்க ஆரம்பிக்கும் பொழுது வீக்கம் ஏற்படுகிறது.

இந்த கால் வீக்கம் காலை நேரங்களில் குறைவாக இருக்கும். நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும். வெயில் காலங்களில் வீக்கம் அதிகரிக்கும். சிலருக்கு கை வீக்கம் கூட ஏற்படும்.

  • வீக்கம் அதிகமாக இருப்பின் சற்று பெரிதாக செருப்புகள் வாங்கி உபயோகியுங்கள்.
  • முடிந்தவரை வலதுபக்கம் படுக்கவும். இது மீதான அழுத்தத்தை சற்று குறைக்கும்.
  • கால்களை உயர்த்தி வைக்கவும்.
  •  நிறைய தண்ணீர் குடியுங்கள். குறைந்தது 2 – 2 1/2 லிட்டர் குடியுங்கள்.
  • உப்பின் அளவை உணவில் குறைத்து கொள்ளுங்கள்.
  •  நடைபயிற்சி அல்லது நீச்சல் தொடர்ந்து செய்வது நல்லது.
  •  கால்களை கீழிருந்து மேலாக நீவி விடலாம்.
  •  பார்லி கஞ்சி, வெந்தய கஞ்சி பருகலாம்.
வீக்கத்தில் பச்சை முட்டைகோஸ் இலைகளை வைத்து கட்டி கொண்டாலும் வீக்கம் குறையும்.ஹோமியோபதியில் இதற்கு மருந்துகள் உண்டு. உரிய சிகிச்சை பெறலாம்.

மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி என்றும் நோயின்றி வாழ நலமுடன் வாழ,உங்களுடன்... 
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).


 



Post a Comment

0 Comments