
தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஆறு மாடி பள்ளிவாசல் ஒன்றை தன் பெயருக்கு அபகரித்தது சம்பந்தமாக பிரபலமான கோடீஸ்வரர் ஒருவர் சம்பந்தமான காணொளி ஒன்றை வத்தளை ஹுனுப்பிட்டிய இஸ்மத் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பள்ளிவாசலை அபகரித்த பிரபல கோடீஸ்வரர், வத்தலை இஸ்மத்துக்கும், பள்ளிவாசலை கட்ட இலவசமாக வேலை செய்த பொறியியலாளர் நஸ்ருதீன் அவர்களுக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை கங்கொடவில நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், இவர்கள் இருவரும் தனக்கு எதிராக, தன்னைப் பற்றிய பொய்களைக் கூறியதுடன், நீதிமன்றத்திற்கு பொய்களை முன்வைத்து நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும், இவர்கள் இருவருக்கு எதிராகவும் நீதிமன்றம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறப்பட்டிருந்தது.
ஹுனுபிட்ட இஸ்மத்திற்கும், பொறியியலாளர் நஸ்ருதீன் அவர்களுக்கு எதிராகவும் இந்த வழக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரான, பள்ளிவாசல் விவகாரத்தில் விசாரணை நடத்தும் விசாரணை குழு, இப்பள்ளிவாசல் விடயத்தில் மோசடி நடந்துள்ளதாகவும், இப்பள்ளிவாசல் சம்பந்தமாக போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுச் சொத்தான பள்ளிவாசல் ஒரு தனி நபர் பெயரில் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் ஒரு பாரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும்,
திறந்த நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலையில் விசாரணை குழு விசாரணை அறிக்கையை பகிரங்கமாக வாசித்தது.
இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் எதிராகவும் தாக்கல் செய்யப்படிருந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அத்தோடு இந்த ஆவண மோசடி சம்பந்தமாகவும், இந்த ஆவண மோசடியில் ஈடுபட்ட அனைவரிடமும் மற்றும் இந்த ஆவணத்தை தயாரித்த நொதாரீஸ் உட்பட. இது சம்பந்தப்பட்ட முழுமையான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் விசாரணை குழுவுக்கு உத்தரவிட்டது
இந்த வழக்கில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் வக்பு சொத்து சம்பந்தமாகவும், ஒரே நேரத்தில் பல பள்ளிவாசல்களில் நம்பிக்கை பொறுப்பாளராக செயல்பட்டு வரும் சர்ச்சைக்குரிய பிரபல சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கதாகும்.
வேட்டை நிருபர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments