
அறிந்திடும் நெஞ்சம் அழுகையிலே,
அதைக் கூறிட அருகே ஆளில்லையே.
அச்சம் என்னுள் அதிகமே,
அவஸ்தை அதைவிட அதிகமே.
அன்பே… நான் என்ன செய்வேன்?
அமைதியாய் இருக்கவும் முடியவில்லையே.
அழுதிடவும் மனம் விரும்பவில்லையே.
உன் நினைவை என்னால்
விட்டு விலக்க முடியவில்லையே.
நீ வருவாயோ என்ற நம்பிக்கையில்
நாளும் கதவைப் பார்க்கிறேன்.
நீ வரவில்லை என்ற வலியினிலும்
உன்னையே நினைத்துக்
கொண்டே உறங்குகிறேன்.
காதல் தந்த வலியையும்
காதலாகவே சுமக்கிறேன்.
நீ அறியாத என் கண்ணீரை
நானே அணைத்துத் துடைக்கிறேன்.
ஆர்.எஸ்.கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






1 Comments
நன்றிகள் அண்ணா
ReplyDelete