
அருளின்றி வாழ்ந்தாலும் வாழலாம்
அன்பின்றி வாழ்தல் நல்லதல்ல!
ஆசையின்றி வாழ்ந்தாலும் வாழலாம்
ஆற்றலின்றி வாழ்தல் நல்லதல்ல!
இனிமையின்றி வாழ்ந்தாலும் வாழலாம்
இரக்கமின்றி வாழ்தல் நல்லதல்ல!
ஈரமின்றி வாழ்ந்தாலும் வாழலாம்
ஈகையின்றி வாழ்தல் நல்லதல்ல!
உயர்வின்றி வாழ்ந்தாலும் வாழலாம்
உண்மையின்றி வாழ்தல் நல்லதல்ல!
ஊனமின்றி வாழ்ந்தாலும் வாழலாம்
ஊக்கமின்றி வாழ்தல் நல்லதல்ல!
ஐவருடன் பழகாமல் வாழலாம்
ஐம்புலனைக் கட்டவிழ்த்தல் நல்லதல்ல!
ஒட்டாமல் வாழ்ந்தாலும் வாழலாம்
ஒழுக்கமின்றி வாழ்தல் நல்லதல்ல!
ஓதாமல் வாழ்ந்தாலும் வாழலாம்
ஓந்தியைப்போல் வாழ்தல் நல்லதல்ல!
ஔடதம் இன்றி வாழ்ந்தாலும் வாழலாம்
ஔவைத் தமிழின்றி வாழ்தல் நல்லதல்ல!
0 Comments