Ticker

6/recent/ticker-posts

Ad Code



மருமகளுக்கு தாலிகட்டிய மாமியார்.. நள்ளிரவில் நடந்த நரிக்குறவ ஜோடி திருமணம்!

பழமையான வாழ்க்கை முறையையும் மரபுகளையும் இன்று வரை கடைபிடித்து வரும் சமூகங்களில் நரிக்குறவர் சமூகம் முதன்மையானது என்று சொல்லப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில் நடந்த நரிக்குறவர்களின் திருமணத்தை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். கடும் கட்டுப்பாடுகள் ஒழுக்கமான வாழ்க்கை முறை கொண்ட நரிக்குறவர்கள் இன மக்களின்திருமண முறை மிகவும் சுவாரஸ்யமானது.தண்ணீராக ஓடும் மது வேடிக்கையான விளையாட்டுக்கள், சண்டைகள், பஞ்சாயத்துக்கள் என ஏகப்பட்ட கலவரங்களோடு தான் நரிக்குறவ இனத்தினர்திருமண வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.

 

நரிக்குறவ சமூக மக்கள் பெண் குழந்தை பிறந்தால் கொண்டாடுவார்கள். ஏன் தெரியுமா, பெண் குழந்தை பிறந்தால் குலத்தைக் காக்க வந்த குலதெய்வ குழந்தை என போற்றுகிறார்கள். நரிக்குறவ சமூகத்தில் கல்யாணம் பண்ற அப்போ பெண்ணுக்கு மாப்பிள்ளை தான் வரதட்சணை தரணும் அதை வரதட்சனை என்று கூறாமல் பால் கூலி என்று கூறுகிறார்கள்.

அதேபோல் மாப்பிள்ளைக்கு சாமி சொத்து இருக்கணும் சாமி சொத்து என்றால் மூதாதைகள் கொடுத்துட்டு போன சாமி பொருட்கள் நிறைய சாமி சொத்து வச்சிருக்கணும் அதாவது வெள்ளி சிலைகள், வழிபாட்டு சாமான்கள் வச்சிருந்தா பெரியசாமி சொத்து என சொல்லப்படுகிறது அதேபோல் எருமை வெட்டுறவங்க ஆடு வெட்டுறவங்கன்னு இரண்டு பிரிவு இருக்கு ஆடு வெட்டுறவங்க எருமை வெட்டுறவங்க வீட்டுல பொண்ணு எடுக்கணும், அதேபோல் எருமை வெட்டுறவங்க ஆடு வெட்டுறவங்க வீட்டில் பொண்ணு எடுக்கணும்ஒரே இடத்தில் பெண் எடுத்தால் அது அண்ணன் தங்கச்சி முறை ஆகிடும்.

திருமண சடங்குகள்:
மாலை நேரம் தொடங்கிசினிமா பாடல்களை ஒலிக்க விட்டு மது அருந்திவிட்டு ஆண்கள் பெண்கள் என அனைவரும் குத்தாட்டம் போடுவார்கள். சரியாக நள்ளிரவு 12 மணி ஆனதும் திருமண கோலத்தில் ஆண் பெண் இருவரும் மணமேடையில் நிற்க மகனின் அம்மா அதாவது ஷாலினியின் மாமியார் மருமகளுக்கு தாலி கட்டினார்.

தாலி கட்டி முடித்த பிறகு மகன் வீட்டில் பால் கூலியாக மருமகளுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தார்கள். அது மட்டுமல்லாமல் பத்திரகாளி அம்மனுக்கு படைத்த ஒரு உருண்டை சோறும் ஒரு குவாட்டர் சரக்கும் கொடுத்தனர்.

நரிக்குறவர்கள் திருமணம் என்றாலே மது கட்டாயம் தான் போல. இவர்களின் திருமணம் பண்டைய காலத்தில் 15 நாட்கள் நடைபெறும் எனவும் தற்பொழுது காலப்போக்கில் மூன்று நாட்களாக சுருங்கி விட்டதாக தெரிவிக்கின்றனர்.

news18


 



Post a Comment

0 Comments