நபி யூனூஸ் (அலை)
நபி ஹாரூன் (அலை) அவர்களின் மகனான இத்ஸாரின் மகன் பங்காஸுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் அஸ்பு, மற்றவர் யாஸீன். அஸ்புவின் சந்ததி ஏழுடன் நின்றுவிட்டது. அஸ்புவின் சந்ததியிலிருந்து நபிமார்கள் எவரும் பிறக்கவில்லை. பங்காஸின் அடுத்த மகன் யாஸீனுக்கு மகனாகப் பிறந்தவர் நபி இல்யாஸ் (அலை) அவர்களாவர்.
நபி இல்யாஸ் (அலை) அவர்களுக்கு சந்ததிகள் இல்லை. நபி யூஸுப் (அலை) அவர்களின் மகன் அப்ராதிமுக்கு இரண்டு பிள்ளைகள். அவர்களில் ஒருவரான சவ்திமின் மகனான அதியின் மகனே நபி அல் யஸாஃ (அலை) அவர்களாவர்.
நபி யாகூப் (அலை) அவர்களின் ஒன்பதாவது மகன் புன்யாமீனின் ஒன்பதாவது வழித் தோன்றலில் வந்தவர்களே நபி யூனூஸ் ஆவார்.
யூனூஸ் நபியவர்களை மீன் விழுங்கிய சம்பவம் அல்-குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது.
நபி யாகூப் (அலை) அவர்களின் ஆறாவது மகன் யாகூஸாவின் வழித்தோன்றலில் 11வது சந்ததியாக வந்தவர்களே நபி தாவூத் (அலை) அவர்களாவர். நபி தாவூத் (அலை) அவர்களுக்கு ஸபூர் வேதம் கிரேக்க மொழியில் அருளப்பட்டது. நபி தாவூத் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும், அரசராகவும் வாழ்ந்தார்கள்.
நபி தாவூத் அவர்களின் மகனே நபி சுலைமான் (அலை) அவர்களாவர். நபி சுலைமான் (அலை) அவர்களின் மகன் குஷையிமின் 16வது சந்ததியில் வந்தவர் நபி ஷக்கரிய்யா (அலை) அவர்களாவர். நபி ஷக்கரிய்யா (அலை) அவர்களின் மகனே நபி யஹ்யா (அலை) அவர்கள். இவரை “ஜோன்” என்று கிறிஸ்தவர்கள் அழைப்பர்.
(தொடரும்)
0 Comments