Ticker

6/recent/ticker-posts

Ad Code



வைரலாகும் தெஹிவளை சுமக வித்தியாலயப் பிரச்சினை உண்மை நிலவரம் என்ன ?


கடந்த சில தினங்களுக்கு முன்பாக , தெஹிவளை பகுதியைச் சேர்ந்த அக்மீமன தயாரத்ன தேரர் அவர்களால் நடத்தப்பட்ட ஒரு பத்திரிகை மகாநாடு சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும்  வைரலா பரவி வருகின்றது.

ஞான சார தேரரின் சஹாவான இவர் , கடந்த காலங்களில் ஞானசார தேரருடன் மும்முரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டவர், பொதுபல சேனாவின் அதி தீவிர அங்கத்தவரும் ஆவார். 

இவர் தனது செய்தியில் தெஹிவளை கவுடா வீதிக்கு குறுக்கே உள்ள யூனியன் பிளேஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள, சிங்கள பௌத்த பாடசாலையை முஸ்லிம்கள் பலாத்காரமாக கைப்பற்றியுள்ளதாக ஒரு செய்தியை பரப்பி வருகிறார்.

இதன் உண்மை என்ன ?

தெஹிவளை பாலத்திற்கு அடுத்ததாகவுள்ள,  இல 9 மூவர் வீதியில் அமைந்துள்ள சிறிய பாடசாலையான மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் மிக நீண்ட காலமாக இடப்பற்றாக்குறை  நிலவி வருகின்றது.

இதனை அடுத்து இப்பாடசாலையை தனவந்தர் ஒருவர் மூன்று மாடி கட்டிடங்களாக கட்டி அன்பளிப்பு செய்தார். காலப்போக்கில் தெஹிவளை, களுபோவிலை, கல்கிஸ்ஸை, ரத்தமலானை பகுதியை நோக்கிய மக்களின் குடியேற்றம் அதிகரித்த மையினால் இப்பாடசாலையில் இடப்பற்றாக்குறை தொடர்ந்தும்  கட்டுக்கடங்காமல் உள்ளது.

பாணந்துறை ஹொரே தொடுவை சிறிய ஒரு முஸ்லிம்  வித்தியாலயத்தை  அடுத்துள்ள ,அடுத்த முஸ்லிம்  பாடசாலை மீலாத் முஸ்லிம் வித்யாலயமாகும்.

பம்பலப்பிட்டியில் முஸ்லிம்மகளிர் கல்லூரி அமைந்திருந்த போதிலும், அது தனியான பெண்கள் கல்லூரியாகும். 

ஆண் பிள்ளைகள்  படிப்பதற்கு இதனிடையே மருதானை ஸாஹிரா கல்லூரியைத் தவிர வேறு பாடசாலைகள் இல்லை.

ஸாஹிராக் கல்லூரியும் நிரம்பி வழிவதோடு, அது ஒரு கட்டடனம் செலுத்த வேண்டிய பாடசாலை என்பதால், சில வறிய பெற்றோர்களுக்கு பிள்ளைகளை சேர்ப்பதற்கு மீளாத் முஸ்லிம் வித்தியாலயத்தைத் தவிர வேறு பாடசாலைகள் இல்லை.

இதனிடையே தமிழ் மொழி பாடசாலைகள் பல இருந்தபோதிலும், அரச சுற்று நிறூபத்தின் படி குறிப்பிட்ட சிறு வீதத்தையே முஸ்லிம் மாணவர்களுக்காக இவர்கள் ஒதுக்குகின்றனர். 

இந்நிலையில் இலங்கையின் பூர்வீக பிரஜைகள் என்ற வகையிலும்,  நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மாணவச் செல்வங்களுக்கு கல்வி வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் தார்மீக கடமையாகும். 

எனவே இப்பகுதியில் அரச காணிகள் இல்லாத நிலையில், பாடசாலை ஒன்றை அமைப்பதில்  அரசாங்கத்தின் பொருளாதார நிலை போன்றவற்றை கருத்தில் கொண்ட கடந்த கால கல்வி அமைச்சு, இப்பகுதி மாணவர்கள் இன்றி  மூடப்பட்டுள்ள இரு பாடசாலைகளில்  ஒன்றை தற்காலிகமாக மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்துடன் ஒன்றினைத்து, தீவிரமாகியுள்ள பாடசாலை இடப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முடிவு செய்தது.

இதற்கிணங்க சென்ற அரசாங்கத்தில் பதவி வகித்த கல்வி அமைச்சர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். இதற்காண முதல்கட்ட வேலைகளை கடந்த அரசாங்கமே ஆரம்பித்தது.

இடையில் ஏற்பட்ட தேர்தல் நிலவரம் காரணமாக இதற்கான வேலைகள் தாமதமடைந்ததோடு, இதற்கான முயற்சிகளும் இடைநிறுத்தப்பட்டது.

எனவே மாணவர்களின் இடப் பற்றாக்குறை தீவிரமக உள்ளதால், புதிய  அரசாங்கம் பதவிக்கு வந்தும் இரண்டு வாரங்களில் இடைநிறுத்தப்பட்ட வேலைகளை அவசர அவசரமாக ஆரம்பித்து   இப் பிரச்சனையை  தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.

இதன் அடிப்படையில் மேல் மாகாண முதலமைச்சர் தீவிரமாக செயல்பட்டு கடந்த கால அரசாங்கத்தில் இடைநிறுத்தப்பட்ட இப் பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

இதன்படி தெஹிவளை கவ்டான யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சுமக வித்தியாலயம் தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கா தற்காலிகமாக கையளிக்கப்பட்டு, அரச தீர்மானத்துக்கு அமைய பிலியந்தலை கல்வி அதிகாரியினால் மீலாத் முஸ்லிம் வித்யாலயத்திற்கு சட்டதிட்டங்களுக்கு அமைவாக, உத்தியோபூர்வமாக கையளிக்கப்பட்டது. இதுவே இதன் உண்மையான நிலைப்பாடாகும்.

இதனை அடுத்து, இப்பாடசாலை நீண்ட காலமாக பராமரிப்பு இன்றி காணப்பட்டதனால், இதனைத் திருத்தியமைக்க பாரிய தொகை பணத்தை பெற்றோர்களும் நலன் நலன் விரும்பிகளும் இதற்காக செலவிட்டனர். 

அக்மீமன தேரர் கூறுவது போல் இங்கு எந்த அபரிப்புகளோ பலாத்காரங்களோ பிரயோகிக்கப்படவில்லை. இது கல்வி அமைச்சின் சொத்து. இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் கல்வி அமைச்சுக்கே உண்டு. எனவே இதன் இறுதித் தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுத்தது.

இதை அரசியலாக மாற்றி நாட்டில் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணும் வகையிலான பிரச்சனை ஒன்றை  ஏற்படுத்த இதன் பின்னணியில் சில அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர்.

இவர்கள் சென்று இதை அக்மீமன தேரரிடம் முறையிட்டு  ஒரு தேசிய பிரச்சனையாக மாற்றும் அளவில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே தேரர் குறிப்பிடுவது போல் இதை முஸ்லிம் பாடசாலைக்கு பெற்றுக் கொள்வதற்காக பலாத்காரங்களோ, அதிகாரங்களோ, பணப்பரிமாற்றங்களோ நடைபெறவில்லை என்பதே உண்மையாகும்.

இங்கு நிலவி வரும் பாடசாலை பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்த முடிவே இதுவாகும்.

பேருவளை ஹில்மி


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments