Ticker

6/recent/ticker-posts

Ad Code



சவுதி அரேபியாவில் இருந்து அன்பளிப்பு செய்யப்பட்ட புனித குர்ஆன் பிரதிகளை திருப்பி அனுப்ப தீர்மானம்!














சவ்தி அரேபியாவில் இருந்து இலங்கை மதரஸாக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சவ்தி அரேபியாவில் வசிக்கும் ஸாதிக் ஹாஜியார் அவர்களால் சவ்தி அரசாங்கத்திடமிருந்து  பெற்றுக் கொடுக்கப்பட்ட  புனித அல் குர்ஆன் பிரதிகளின் மொழி பெயர்புகளை  இலங்கை உலமாக்கள் குழுவின் சிபாரிசுக்கு அமைய  சவ்தி அரேபியாவுக்கு மீண்டும் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை மக்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட இக்குர்ஆன் பிரதிகளில்  15000 பிரதிகள் சிங்கள மொழியிலான மொழிபெயர்ப்பு அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் இலங்கைக்குள் கொண்டுவரப்படும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட  புத்தகங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு  சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற அப்போதைய கோட்டாபே ராஜபக்ச  அரசு  தீர்மாணித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்காக நியமிக்கப்பட்ட 9 பேர்கொண்ட  பரிசீலனைக் குழுவில் முஸ்லிம் கலாச்சார அமைச்சின் பணிப்பாளரின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உற்பட,  ஜமீயதுல் உலமாவின் ஆறு உலமாக்கள் உற்பட 9 பேர் உறுப்பினர்களாக அடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த பரீச்லனையின் போது சிங்கள மொழியிலான  பிரதிகளில் பல இடங்களில் கடுமைய வசணங்கள் பயண்படுத்தப்படுள்ளதாகவும்,  எனவே இதை வெளிடமுடியாது எனவும் உலமாக்களால் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த பிரச்சினை சம்பந்தமாக இலங்கை வந்திருந்த ஸாதிக்ஹாஜியார்  அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது.

இலங்கையில் உள்ள பல மதரஸாக்களில் குர்ஆன் பற்றாக்குறை நிலவுவதாகவும், இது பலராலும்  குர்ஆன் பிரதிகளை பெற்றுத்தரும்படி தன்னிடம் வேண்டப்பட்டதாகவும், அதற்கு அதற்கிணங்க தான் உடணடியாக இதற்கா செயல்பட்டதாகவும் தெவித்தார். 

கடந்த அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சர் விதுர விக்ரம நாயக்க அவர்கள் ஹஜ் விடயமாக சவுதி அரேபியா வந்திருந்த பொழுது அவரிடம் கதைத்து அனுமதி பெற்ற பின்பே தான் இதை இலங்கைக்கு அனுப்பியதாகவும், அப்போது முஸ்லிம் கலாச்சார அமைச்சின் பணிப்பாளர் உற்பட அதிகாரிகள் உடன் இருந்ததாகவும், இலங்கையில் நிலவும் இவ்வாறான பிரச்சினை  சம்பந்தமாக ஒருவர் கூட தன்னிடம் இது பற்றி விளக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் முதல் தொகுதியாக 15000 பிரதிகளை முதலில் இலங்கைக்கு அனுப்பியதாகவும், இன்னும் ஒரு கொள்கலன் சிங்கள மொழியிலான குர்ஆன் பிரதிகள் இலங்கை மக்களுக்காக அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

சவுதி அரேபியாவின் தஃவா பிரிவில்,  உலகில் உள்ள அத்தனை மொழிகளிலுமான குர்ஆன் பரிவர்தனைகளும் அவர்களின் கணினி பிரிவில் வைத்திருப்பதாகவும், அந்தந்த நாடுகளில் இருந்து குர்ஆன் கேற்கப்படும்போது  அதை உடனே அச்சிட்டு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவின் தஃவா கணனி பிரிவில் உள்ள குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு ஜமீயதுல் உலமாவின்  காலஞ் சென்ற முபாரக் மெளலவி அவர்களின் தலைமையில்,  ஜமீயதுல்  உலமாவின் பல உலமாக்கலால் மொழி பெயர்க்கப்பட்டு சவுதி அரசுக்கு வழங்கப்பட்தாகும்.
எனவே அது ஜமீயதுல் உலமாவின் சிங்கள மொழியிலான பரிவர்த்தனையாகும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஜமீயதுல் உலமாவினால் மொழி பெயர்கப்பட்ட சிங்கள மொழியிலான குர்ஆன் பிரதியை அவர்களே நிராகரிப்பதற்கான காரணத்தை தாம் அறியவில்லை எனவும் தரிவித்தார்.

இது சம்பந்தமாக அவர் ஜமீயதுல் உலமாவி தலைவர் அவர்களை சந்தித்துக் கதைத்த போது இதற்கு எதிராக வழக்கு தொடருங்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். 

தனக்கு 80 வயதுகள் ஆகின்றதாகவும், தான் முடியாத ஒரு நிலையிலேயே  இதற்கா இலங்கை வந்ததாகவும், இதற்கு தன்னால் வந்து வழக்காட முடியாது எனவும் தெரிவித்தார்.

இறுதியாக அரபு  மொழியிலான குர்ஆன் பிரதிகளை மக்களுக்கு வழங்கவும், சிங்கள பரிவர்த்தனையில் மாற்றப்பட வேண்டிய இடங்கள் சம்பந்தமாக ஒரு விளக்க இணைப்பை அச்சிட்டு அதனுடன் இணைத்து வழங்க அதற்கான செலவை தான் ஏற்றுக் கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டு, அரபு சிங்கள  மொழியிலான குர்ஆன் பிரதிகள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

சிங்கள பரிவர்த்தனை விளக்க இணைப்பு அச்சிடும் வரை சிங்கள மொழியிலான குர்ஆன் பிரதிகள்  இலங்கை சுங்கப் பகுதியின் ஊர்கொடவத்தை பண்டக சாலையில் நீண்டகாலமாக  அரச பாதுகாப்புடன்  வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததை தொடர்ந்து தாமதிக்காமல் உடனடியாகவே சுடச் சுட இந்தப் பணியை  பொறுப்பேற்று தலைமை தாங்கி  இதற்கான விளக்கத்தை எழுதி இப்பணியை  நிறைவேற்ற எந்த உலமாக்களும் முன்வரவில்லை. 

இதனால் இக்கவலையான நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

நானும் பல உலமாக்களிடம் இது சம்பந்தமாக முன் வருமாறு கோரிக்கை விடுத்த போது உலமாக்கள் அவர்களின் பவுண்டேஷன் colection களிலும், வெளிநாட்டு பயணங்களிலும்,  உம்ரா குழு நடத்துவதிலும் ஹஜ் குழுவுக்கு ஆள் சேர்ப்பதிலும் கண்ணும் கருத்துமாய் இருந்தார்களே தவிர இதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை என்பது ஒரு கவலை குறிய விடயமாகும்.

இறுதியில் குர்ஆன் பிரதிகளை சவுதி அரேபியாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டிய ஒரு கவலையான நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டும். 

இந்த குர்ஆன் பிரதிகள்
சவுதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பப்படுமானால், திருப்பி அனுப்பியதற்கான  காரணங்களை இவர்கள் சவுதி அரசாங்கத்திற்கு தெளிபடுத்த வேண்டும் எனவும்,  இவர்களினால் சவுதி அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்படுமிடத்து அது இலங்கையின் நட்பெயருக்கு கலங்கும் விழைவிப்பதோடு, இதன் பிறகு இவ்வாறான உதவிகள் சவுதி அரசாங்கத்திடமிருந்து மீண்டும் எதிர்பார்க்க முடியாமல் போகும். 

எனவே   இது சம்பந்தமாக உலமாக்கள் புத்தி சாதூரியமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் அன்று  தெரிவித்தார்.

பலர் இது சம்பந்தமாக மிகக்கஷ்டப்பட்டு முடிவுக்கு கொண்டு வந்த போதிலும் இதற்காக செயற்படாமல் ஏற்பட்ட அசமந்த நிலையே இந்த கவலையான நிலை.

உலமாக்களின் பரிந்துறை ஆவனம் இனைப்பு.






பேருவளை ஹில்மி

Post a Comment

0 Comments