Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஆக்கிரமிக்க தொடங்கிய இஸ்ரேலியர்கள்: கேள்விக்குறியாகும் இலங்கை சுற்றுலாத்துறை


சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அருகம் விரிகுடா பகுதியில் சுற்றுலாத் துறையை கடுமையாகப் பாதித்து வருவதாக அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலியர்கள் இந்தப் பகுதியில் சுற்றுலாத் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அண்மையில் நாட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டு பயணியொருவர் காணொளியொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், அருகம் விரிகுடா பகுதிக்குச் சென்றபோது, இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் சென்றது போன்ற அனுபவம் தனக்கு ஏற்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, அருகம் விரிகுடா பகுதி முழுவதும் இஸ்ரேலியர்கள் தங்கள் ஆட்சியைப் பரப்பி, சில இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவான பிரச்சார ஸ்டிக்கர்கள் ஒட்டியுள்ளதையும் அடையாளங்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், இஸ்ரேலியர்கள், அருகம் விரிகுடா பகுதியில் இஸ்ரேலியர்கள் வர்த்தகத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேலியர்களின் குறித்த செயற்பாடு காரணமாக உள்நாட்டு வர்த்தகம் பாதிப்படையும் அபாயத்தில் இருப்பதாக அப்பகுதி வர்த்தகர்கள் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ibctamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments