
சூரிய ஒளி மெல்லத் தன் வீட்டு யன்னலினூடே எட்டிப்பார்த்தபோது, செரோக்கி விழித்துக் கொண்டான். ரெங்க்மா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
தந்தையோடிணைந்து செரோக்கி மேற்கொண்டிருந்த பணி இப்போது அவன் முன் ததிக்கனத்துவம் ஆடிக் கொண்டிருந்தது!
தந்தை சற்று நோய்வைப்பட்டிருந்த இன்னிலையில், தனியாக அவன் மட்டும் வனத்திற்குள் சென்று எச்சங்களையும் மூலிகைகளையும் தேடிவர வேண்டிய நிலைக்காளானான்!
யன்னலினூடே ஒருமுறை அந்தப் பென்னம்பெரிய கிடங்கை எட்டிப்பார்த்தான்!
முக்கால்வாசி நிரம்பியிருந்த அது, என்னை முழுவாசியாக நிரப்பு என்று குறிப்பிடுவது போலிருந்தது! தனக்கு வந்து சேர்ந்துள்ள பாரிய பொறுப்பை இனிமேலும் அவன் உதாசீனம் செய்ய விரும்பவில்லை!
தன் புதுமனைக்கு வெளியில் வந்து, ஜாகையைக் கடந்து குகைவரை சென்று மேட்டிலிருந்து கொட்டிக்கொண்டிருந்த பளிங்கு நீரில் தன் முகத்தை அலம்பிக் கொண்டவந், அருகிலிருந்த கற்பாறையில் அமர்ந்தபோது, வழமைபோல் அவனது தாய் மூலிகைக் கஞ்சிச் சிரட்டையை நீட்டினாள்.
“அம்மா நான் வனத்துக்குச் செல்ல வேண்டும்...”“தனியாகவா..?” தாய் அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“இப்போதைக்கு தந்தையால் வரமுடியாதே! நான் சென்று வருகிறேன்!”
“நானும் உங்களோடு வருவேன்..!” என்ற ஒலி கேட்டு, திரும்பிப் பார்த்த வேளை, அங்கு ரெங்க்மா அசடு வழிய நின்றிருந்தாள்!
“உன்னால் வனத்துக்குள் செல்ல முடியாது... அது மிகவும் பயங்கரமானது...” செரோக்கி அவளை அழைத்துச் செல்ல மறுத்தபோது, அவள் அடம்பிடிக்கலானாள்.
ரெங்க்மாவோடு அவன் பழகிய சில காலங்களில், அவளது பிடிவாதக் குணத்தை அவன் அறிந்து வைத்திருந்ததால், மறுப்புத் தெரிவிப்பதில் பலனிருக்காது என்று புரிந்துகொண்டவன், அவளையும் வனத்துக்குள் அழைத்துச் செல்ல உடன்பட்டபோது, அவள் துள்ளிக்குதித்தபடி தன் மனைக்குள் ஓடிச்சென்றாள்.
(தொடரும்)
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments