
மெக்சிகோ வளைகுடாவின் பெயரை 'அமெரிக்க வளைகுடா' என மாற்றவிருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி மெக்சிகோ அதிபர் கிளவ்டியா ஷேன்பாம் (Claudia Sheinbaum) Google நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
Google நிறுவனம் அதன் வரைபடச் சேவையில் அந்தப் பெயர் மாற்றத்தைச் செய்யப் போவதாய் அறிவித்திருந்தது.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதும் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை "அமெரிக்க வளைகுடா" என்று மாற்றத் திரு டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
Google வரைபடத்தில் உள்ள புதிய பெயர் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும்.
உலகில் உள்ள மற்ற பகுதிகளில் இருப்போருக்குத் மெக்சிகோ வளைகுடா என்ற பெயரே தெரியும்.
நூற்றாண்டுகளாய் "மெக்சிகோ வளைகுடா" என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாட்டு நிறுவன உடன்பாட்டின் கீழ் உள்ள கடல் சட்டத்தின்படி ஒரு நாட்டின் அரசுரிமை கரையைக்கு அப்பால் சுமார் (12 கடல் மைல்) 22 கிலோமீட்டர் வரை மட்டுமே என்று கூறப்படுகிறது.
எனவே அமெரிக்கச் சட்டப்படி பெயரை மாற்ற முடியாது என்று மெக்சிகோ கூறி வருகிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments