
சிரியாவின் HDS போராளிப் படையின் தலைவர் அஹ்மது அல்ஷரா, அந்த நாட்டின் இடைக்கால அதிபரானார்.
இது குறித்து புதிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஹஸன் அப்துல் கனி கூறுகையில், சிரியாவில் முழுமையான ஆட்சி மாற்றம் நிகழும்வரை, நாட்டின் இடைக்கால அதிபராக அல்ஷரா பொறுப்பு வகிப்பார் என்றார்.
சிரியாவில் 2011இல் தொடங்கிய உள்நாட்டுப் போரில் ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன் பெரும்பான்மையான பகுதிகளை அல்அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது.
பின்னர் சில ஆண்டுகள் அமைதி நிலவி வந்தநிலையில், அல்அஸாத் படைகளுக்கு உதவி வந்த ரஷியாவும், லெபனானின் ஹிஸ்புல்லா படையினரும் உக்ரைன் மற்றும் காஸா போர்களில் கவனம் செலுத்திய சூழலைப் பயன்படுத்தி, அந்தப் படைகளுக்கு எதிராக ஹெச்டிஎஸ் ஆயுதக் குழுவின் தலைமையில் கிளர்ச்சிப் படையினர் கடந்த நவம்பர் மாத இறுதியில் திடீரென தாக்குதல் நடத்தி தலைநகர் டமாஸ்கஸ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினர்.
ஆட்சியை இழந்த அதிபர் அல்அஸாத் குடும்பத்தினருடன் ரஷியாவுக்கு தப்பிச் சென்றார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments