Ticker

6/recent/ticker-posts

Ad Code



மஞ்சளின் பயன்கள்

இந்திய மசாலா உணவு பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மஞ்சள். மருத்துவத்தில் தொடங்கி இறை வழிபாடுகள் வரை அனைத்திலும் பயன்படும் மஞ்சள், குளிர் காலத்துக்கு உகந்த மருந்துப் பொருளாகவும் இருக்கிறது. 

மஞ்சளில் காணப்படும் குர்குமின், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் குளிர்காலத்தில் அனைவரும் இதனை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு மஞ்சள் துணை புரிகிறது.

மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக புற்றுநோயை தடுக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மஞ்சளை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உங்கள் குளிர்கால உணவில் மஞ்சளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

மஞ்சள் எண்ணற்ற உடல் உபாதைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக குளிர்கால சைனஸ், மூட்டு வலி, அஜீரணம், சளி மற்றும் இருமல் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கிறது. குளிர்கால தொற்று நோய்களில் இருந்து உடனடி நிவாரணம் பெற, பால் மற்றும் தேநீர் போன்ற பானங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து பருகலாம். மேலும் மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு டம்ளர் பாலில் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குடிப்பதன் மூலம் தொற்றுக்கிருமிகள் உடலுக்கு செல்லாமல் பாதுகாக்கலாம்.

மஞ்சள் உணவுக்கு சுவை சேர்க்க மட்டுமின்றி செரிமானத்திற்கு உதவுகிறது. மஞ்சள் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இதனால் கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் செயல்பாடு மேம்படுகிறது. மேலும் உடல் உள்ள நச்சுக்கள் நீங்கினால் சருமமும் பளபளப்பாகும்.

மஞ்சள், குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்புக்குச் சிறந்த மருந்து. விரலி மஞ்சளை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு அந்தப் புகையை மூக்கின் வழியாக உள்ளே இழுக்க மூக்கடைப்பு மற்றும் இரைப்பு கட்டுப்படுத்தப்படும்.

மஞ்சள் பாக்டீரியா தொற்றை அகற்றவும், தொண்டை புண்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. குளிர்காலத்தின் ஆரம்ப கால பருவ நோயாக காய்ச்சல், சளி இருக்கிறது. பெரும்பாலான ஆசிய குடும்பங்களில், மஞ்சள் பால் இயற்கை மருந்தாக பயன்படுகிறது. மஞ்சளுடன் இலவங்கப்பட்டை போன்ற மசாலா பொருட்களை பயன்படுத்துவது புத்திசாலித்தனமானது. மஞ்சளின் குணப்படுத்தும் பண்புகள் அல்சைமர் சிகிச்சைக்கும் உதவுவது குறிப்பிடத்தக்கது. மேலும் குளிர்காலத்தில் அஜீரணக் கோளாறுகள் அதிகமாக ஏற்படும். அவற்றிலிருந்து விடுபட உணவில் சற்றே அதிகமாக மஞ்சளை சேர்த்துக் கொள்வது நல்லது.

Post a Comment

0 Comments