Ticker

6/recent/ticker-posts

Ad Code



COVID-19 தொற்றினால் மரணித்த ஜனாஸாக்கள்: பலாத்காரமாக தகனம் செய்ததற்கான விபரங்களை சேகரிக்கும் விண்ணப்பம்.


கடந்த கொரோனா காலத்தில், கொரோனாவினால் இறந்த உடல்கள் பலாத்காரமாக கட்டாய தகனம் செய்யப்பட்டது.

அரசாங்கத்தின் இத்தீர்மானமானது சர்வதேச ஆலோசனைகளையும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களையும் மீரும் வகையில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட ஒரு பாரிய அநீதியாகும். 

இவ்வாறு கொரோனாவால்  மரணித்து பலாத்காரமாக கட்டாய தகனம்  செய்யப்பட்டு,  அநீதி இழைக்கப்பட்டவர்களின் தகவல்களை ஒன்று திரட்டி வரலாற்றின் ஓர் ஆவணமாக பாதுகாக்கப்படவேண்டும்.

மேலும் இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  நியாயத்தை,  இழப்பீட்டை பெற்றுக் கொடுக்கவும்  தகவல்களை திரட்டும் விண்ணப்ப படிவம் ஒன்றை கீழே பதிவிட்டுள்ளோம்.

எனவே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள், கீழ் உள்ள ஆங்கில, அல்லது தமிழில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து  அனுப்பி  வைக்கும்படி வேண்டிக்கொள்கின்றோம்.  ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேல் மரணம் சம்பவித்திருந்தால், தனித்தனியான விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கும் மாறு வேண்டிக்கொள்கின்றோம். 

விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அறிவு,  அனுபவம் குறைந்தவர்களுக்கு ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள், பள்ளிவாசல் முக்கியஸ்தர்கள் முன் வந்து உதவிகளை செய்து அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

மேலதிக தகவல்களுக்கு
ஹில்மி:+94 777 913181.   
நியஸ்தீன் ஸத்தார்: +94 77 483 7607 

Tamil form: 👇

English form: 👇



Post a Comment

0 Comments