Ticker

6/recent/ticker-posts

Ad Code



மக்களை பீதியில் தள்ளிய மர்ம நோயை அடையாளம் கண்ட வல்லுநர்கள்... பெண்கள், சிறார்களுக்கு அவசர எச்சரிக்கை


குறைந்தது 143 பேரைப் பலிவாங்கிய கொடிய மர்ம நோயை இறுதியில் அடையாளம் கண்டுள்ளனர்.

கடுமையான மலேரியா

ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசின் குவாங்கோ மாகாணத்தில் சுமார் 400 பேர்கள் அடையாளம் காணப்படாத நோயின் அறிகுறிகளுடன் சிகிச்சையில் உள்ளனர்.

பொது சுகாதார வல்லுநர்கள் தற்போது இந்த நோயை கடுமையான மலேரியா என்று அடையாளம் கண்டுள்ளனர், அதிக ஊட்டச்சத்து குறைபாடு நோயை எதிர்த்துப் போராடும் மக்களின் திறனை பலவீனப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

காங்கோ சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மர்மம் இறுதியில் விலகியதாகவும், இது ஒரு சுவாச நோயின் வடிவத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான மலேரியா எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அக்டோபர் மாத இறுதியில் இருந்தே பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400-ஐ எட்டியதும் காங்கோ முழுவதும் உயர்மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இறப்பு விகிதம் 6.25 எனவும் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறார்களையே இந்த நோய் தாக்குவதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், இதுவரை மரணமடைந்துள்ளவர்களில் சரிபாதி பேர்கள் 5 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்றும், மிக ஆபத்தான நிலையில் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட சிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், தலைவலி, காய்ச்சல், இருமல் மற்றும் உடல்வலி ஆகியவற்றால் அவதிப்பட்டுள்ளனர். காங்கோ நாட்டை மொத்தமாக உலுக்கிய இந்த நோய் தொடர்பில் முதலில் Disease X பரவலாக இருக்கலாம் என்றே அச்சம் தெரிவிக்கப்பட்டது.

lankasri



Post a Comment

0 Comments