Ticker

6/recent/ticker-posts

Ad Code



நேர்வழி நோக்கிய வரலாற்றுப் பாதை! -3


அத்தியாயம் -3
நபி ஷீத் (அலை)  அவர்களும் நபி இத்ரீஸ் (அலை) அவர்களும்
நபி ஆதம் (அலை) அவர்களின் புதல்வர்களில் ஒருவரான  நபி ஷீத் (அலை) அவர்கள், ஆதம் (அலை) அவர்களின் 135ம் வயதில் மூன்றாவது மகனாகப் பிறந்ததாக “பைபிள்”  குறிப்பிடுகின்றது. 

“ஷீத்  என்றால் “பகரம்” என்பது பொருளாகும். நபி ஆதம் (அலை) அவர்கள் தனது இரண்டாவது மகன் ஹாபீல் கொலை செய்யப்பட்டதை நினைத்து  மிகவும் வருந்தினார்கள்.  ஹாபீலுக்குப் பகரமாக  ஷீத் (அலை) அவர்களை அல்லாஹ் கொடுத்தருளினான். ஷீத் (அலை) அவர்களை அன்னை ஹவ்வா அவர்கள்  தனியாகப் பெற்றெடுத்ததால்,  பூமியில் இவருக்கு மணப்பெண் இல்லாமலிருந்தது!
 
ஜிப்ரீல் (அலை) அவர்கள், சிரியாவில் வாழ்ந்து கொண்டிருந்த ஷீத் (அலை)  அவர்களுக்கு, சுவனத்துக் கண்ணழகி  “நஹ்வா மக்கா” என்ற  ஹூருலீன் பெண்ணை அழைத்து வந்து மணமுடித்துக் கொடுத்தார்கள்!

நபி ஷீத் (அலை)  அவர்களும் அவர்களது பிள்ளைகளும் அரபு மொழியையே பேசினார்கள். இன்றுவரை சிரியா தேசத்துப் பெண்மணிகள் மிகவும் அழகானவர்களாகத் திகழ்ந்து வருவதற்குக்  காரணம் சுவர்க்கத்து ஹூருலீன் பெண்மணி “நஹ்வா மக்கா”வாக இருக்கலாமென ஊகம் தெரிவிக்கப்படுகின்றது!
 
அல்லாஹ், நபி ஷீத் (அலை) அவர்களுக்கு 50 கட்டளைகளை வழங்கினான்!  அவர்கள் பற்றி அல்-குர்ஆனில் எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டில்லை.  பைபிளின் தகவல் படி இவர் 960 வருடங்கள் வாழ்ந்துள்ளதாக அறிய முடிகின்றது!

நபி ஷீத் (அலை) அவர்களின்  ஐந்தாவது சந்ததியாக வந்த  யராத்தின் மகனே நபி இத்ரீஸ் (அலை) ஆவார். 

இத்ரீஸ் என்றால் ‘கல்வி போதிப்பவர்’ என்ற பொருள்படும். ஆதம் (அலை) அவர்களின் போதனைகளையே நபி இத்ரீஸ் (அலை) அவர்களும் தமது சமூகத்தவருக்குப் போதித்தார்கள்.  தையல் தொழிலுக்கு மூலகர்த்தா இவராவார். இவரது காலத்துக்கு முன்னர் மக்கள் மிருகத்தோல்களையும், இலை தழைகளையுமே உடையாகப் பாவித்து வந்தனர். 

நபி இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு 30 கட்டளைகள் அல்லாஹ்வால் வழங்கப்பட்டன.  தனது நாற்பதாம் வயதை அடைந்தபோது இவருக்கு நபிப்பட்டம் கிடைத்தது!
 
நபி இத்ரீஸ் (அலை) அவர்கள் 865 வருடங்கள் வாழ்ந்ததாகவும்,  நரகம், சொர்க்கம் ஆகியவற்றை நேரில் கண்டவராகவும்  வரலாற்றில் பேசப்படுகின்றார்.
(தொடரும்) 

ஐ.ஏ.ஸத்தார்

Post a Comment

0 Comments