அந்த 9A யும் உருப்படாத நானும்!

அந்த 9A யும் உருப்படாத நானும்!


ஒரு மாணவனின் அனுபவப் பகிர்வு)  
இது சொந்தக்கதை!

இப்பிடித்தான் மொத்த வீடும் பரபரப்பா  இருந்த தருணம். 2009 ல எழுதின O/L எக்ஸாம் ரிசல்ட் 2010 ல வந்த மொமன்ட். காத்தான்குடி மத்திய கல்லூரி சார்பாக கிடைத்த ஒரேயொரு 9A என்டதாலயும் (ரீ கரெக்‌ஷன் கத வேற இருக்கு) நான் காங்கேயனோடைல இருந்து வந்து அல்-மனார்ல சேர்ந்து படிச்சதாலயும் பாராட்டுக்களுக்கும் பரிசுகளுக்கும் பஞ்சமே இல்ல.

இனி என்ன! 9A எடுத்தா Bio தானே படிக்கனும் எங்குற எழுதப்படாத விதிக்கிணங்க ஏற்கனவே அந்த கிணத்துல விழுந்து கெடந்தேன். கலைத்துறையில் மொழியியல், வரலாறு, பொருளியல் என்று ஆர்வமா இருந்த எனக்கும் என் கனவுகளுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டது. கண்டவர் பேச்சையெல்லாம் கேட்டு என் கனவுகளை ஒதுக்கிப்போட்ட நான் விரும்பாத துறையில் 2B 1C பெற்று மொத்தமும் தொலைத்தேன்! இனி ஒரு மாதிரியாக பல்கலைக்கழகத்தையும் முடித்து விட்டேன்! 

ஒவ்வொரு முறையும் O/L இல் 9A எனும் வார்த்தைகளை கேட்கிற போது என்னுள் எழும் வெறுப்பு அலாதியானது! "எடுத்து என்னத்த கிழிக்க" என்று மனதுக்குள் எண்ணிக் கொள்வேன்! உண்மையும் அது தான். 9A எடுத்தவர்களை விட அத விடக்குறைந்த பெறுபேறு பெற்றவர்கள் தான் அதிகம் பிரகாசிப்பார்கள்!

9A எடுத்தவன் Bio அல்லது Maths படிக்க வேண்டும், 2A, 3A எடுத்தவன் கலைத்துறையில் படிக்க வேண்டும் என்கிற எழுதாத விதிகளை துடைத்தெறியுங்கள். 

அவரவர் ஆர்வமுள்ள துறைகளையே தெரிவு செய்யுங்கள். பெற்றோர் தம் ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள். ஆலோசனை மட்டும் வழங்குங்கள்!ஆலோசனையையும் , மனக்குமுறல்களையும்பிள்ளைகளிடம் கேளுங்கள். 

முடிவெடுப்பதில் மூக்கை நுழைக்காதீர்கள்!
உண்மைதான்.........

Post a Comment

Previous Post Next Post