
புறங்கூறாமை
குறள் மொழி-7
7. பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்.
குறள் மொழியின் பொருள் :
குறள் எண் : 187
மனமகிழப் பேசி நட்பு கொள்ளத் தெரியாதவர், பிறர் பழிபேசும் தம் குணத்தால் இருக்கும் நட்பு உறவுகளைப் புறம்பேசிப் பிரித்துவிடுவார்கள்.
நபி மொழி :
"கோள் சொல்லி, புறம்பேசித் திரிபவர்கள், நேசர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள், நிரபராதிகளிடம் குறைகளைத் தேடி அலைபவர்கள் மனிதர்களில் கெட்டவர்கள்” - அண்ணல்நபி-(ஸல்)
ஆதாரம் நூல் : முஸ்னத் அஹ்மத்.
வெகுளாமை
குறள் மொழி 8
8. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
குறள் மொழியின் பொருள் :
குறள் எண் : 302
வலிமைமிக்கவரிடம் சினம் கொள்வது தீமைதரும்; அதுபோல, வலிமை குறைந்தவரிடம் சினம் கொள்வது அதைவிடத் தீமை தரும். ஆதலின் சினத்தைக் கைவிடுதலே சாலச் சிறந்ததாகும். தன்ை ன்னைக் காக்க நினைப்பவன் சினத்தைவிட வேண்டும்; அதுவே சிறப்பாகும்.
நபிமொழி :
ஒருவனை அடித்து வீழ்த்துபவன் வீரனல்ல; உண்மையில் வீரன் என்பவன் கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான். அதுவே நன்மையுடன்; நலம் பயக்கும்.
அண்ணல்நபி (ஸல்)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் முஸ்லிம் : 5085.
வாழ்க்கைத் துணைநலம்
குறள் மொழி 9
9. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
குறள் மொழியின் பொருள் :
குறள் எண் : 53
நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கைத் துணை ஆகிய மனைவியாலேயே ஒருவனுக்கு அனைத்துவித சிறப்புகளும் வந்தடையும். அவ்வாறு அமையாது போனால் எவ்வித நன்மையும் வராது. கேடுதான் வரும்.
நபிமொழி :
ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா...? அவள் தான் நற்பண்புகள் நிறைந்த நல்ல மனைவி ஆவாள்.
அண்ணல் நபி (ஸல்)
நூல் : அபூதாவூத் 1412
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments