Ticker

6/recent/ticker-posts

Ad Code



இதயத்துக்கு ஓர் சிந்தனை...!!!


படைப்பினங்களில் மிகச்சிறந்த படைப்பாக கருதப்படுவது மனித படைப்பே.

மனிதனுக்கு மாத்திரமே இறைவன் ஆறறிவை கொடுத்துள்ளான்.

அதனால் தான் மனிதன் சிந்திக்கிறான்.

சிந்திக்கும் மனிதன்! பலவிதமாக சிந்திக்கிறான்.

சிலர் நல்ல சிந்தனை  உள்ளவராகவும், சிலர் தீயசிந்தனை உள்ளவராகவும் காணப்படுகின்றனர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையையும்,வலிமையையும் இறைவன் கொடுத்துள்ளான்.

இருந்த போதும்;
நீ ,நான் என்று போட்டி போட்டுக் கொண்டு மற்றவரை மதிக்காமல் உதாசினபடுத்துபவர்களாக வாழ்கின்றனர்.

பிறர் மீது எப்போதும் ஒரு கெட்ட எண்ணத்துடனும்,பொறாமை படும்  பண்புடனும் வாழ்கின்றனர்.

தம்மை விட மற்றவர் கொஞ்சம் உயர்வாக இருந்தால் பொறாமை.
வசதியில்,திறமையில்,அழகில் சற்று உயர்வாக இருந்தால் பொறாமை ஏற்படுகின்றன.

என்னை விட அவன் மேலாக உள்ளான்.

அவன் எவ்வாறு இப்படி இருக்க முடியும?  இது  அவனுக்கு பொறுத்தமே இல்லை ? என்று பல விதமாகவும் எண்ணத் தோன்றுகின்றது.

மனித பண்புகளில் இது ஒரு தீயபண்பாகும்.

இப்பண்பு மனிதனிடத்தே உருவாகும் போது அவனிடம் உள்ள நல்ல எண்ணங்கள் அழிந்து போகின்றது.

இது தீ போன்றது.

இதனால் உள்ளங்களில் கரும்புள்ளிகள் தோன்றுகின்றன.காலப்போக்கில் இருதயம் இருளடைந்து விடுகின்றது.

நற்சிந்தனைகள்மறைந்து போகின்றன.

என்னை விட முன்னேறியவனை எவ்வாறு கீழே தள்ளலாம்?
எவ்வாறு அவனை தோற்கடிக்கலாம்?
என்ற எண்ணம் தோன்றுகின்றது.

இதனால் பல பிரச்சினைகள் உருவாகின்றது.
பல குடும்பங்கள், பல உறவுகள், பல நண்பர்கள் இப்பொறாமை எனும் தீயபண்பால் பிரிந்து போன பல கதைகள் உண்டு.

ஏன் எமக்கு இவ்வாறான எண்ணம் தோன்ற வேண்டும்?
இப்பண்பு எம்மிடம் இருப்பது சிறந்ததா?
இதனை நாம் சற்று சிந்திகக வேண்டும்.

எமக்கென்று இறைவன் சில திறமைகள்,சில வலிமைகளை கொடுத்துள்ளான்.

எந்த ஒரு மனிதனுக்கும் ஏதோ! ஒரு திறமையுண்டு.
அதனைக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.

மாறாக மற்றவரை பார்த்து பொறாமை கொள்ளும் எண்ணம் கூடாது.
அதே போன்று மற்றவரை மனதார பாராட்ட கற்றுக் கொள்ள வேண்டும்.
அவர்களை பார்த்து பூரிப்படைய வேண்டும்.

அவனுடைய ஆற்றலை கொண்டு இந்தளவு முன்னேற முடியும் என்றால்!
ஏன் என்னால் முடியாது?

என்ற சிந்தனை வர வேண்டும்.

நம் சகோதரன் ஒரு வீட்டை கட்டினால் அதனைப் பார்த்து நாம் சந்தோசப்படவேண்டும்.

அதிக புள்ளிகள் வாங்கும் ஒரு மாணவனைக் கண்டால் மனதார பாராட்ட வேண்டும்.

வாழ்த்த வேண்டும்.

இவ்வாறான நல்லெண்ணங்கள் எம்மிடம் தோன்றும் போது பொறாமை எனும்தீயகுணம் மறைந்து போகும்.

எனவே எதற்கும் நாம் குறைந்தவரல்ல.
எதையும் எம்மால் சாதிக்க முடியும்?

எனும் நம்பிக்கையுடன் நாம் வாழ பழகிக் கொள்வோம்.
இறைவன் நமக்கு நிச்சயம் வெற்றியை தருவான்!!!


Post a Comment

0 Comments