Ticker

6/recent/ticker-posts

கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் "தமிழ் ஆட்சி மொழிச் சட்டவாரம் விழா"வின் நிறைவு விழா!


கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் 27-12-2025 ஆம் நாள் 
தமிழ் ஆட்சி மொழிச் சட்டவாரம் விழாவின் நிறைவு விழா இனிதே நடைபெற்றது.

தமிழ்த்தாய்   வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.

கோயம்புத்தூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர்  முனைவர் இரா.அன்பரசி அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
தூய தமிழ்ப் பற்றாளர் தமிழ் மணிகண்டன் வரவேற்புடன், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
திருக்குறள் நுண் பயிற்சி வகுப்பு பயிற்றுநர் குறளாசான் தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்கள், மற்றும் கோவை மாநகராட்சி87 ஆவது மாமன்ற உறுப்பினர் திரு பாபு அவர்கள் 
மற்றும் சான்றோர் பெருமக்கள் வாழ்த்துரையும், கருத்துகளையும் வழங்கினார்கள்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நலச்சங்கத் தலைவர் 
கலைமாமணி மு.பெ.இராமலிங்கம் அவர்கள் கருத்துரை வழங்கினார்.

திருக்குறள் நுண் பயிற்சி தொடர் வகுப்பில் தொடர்ந்து பங்கேற்றோர் களுக்கு துணை இயக்குநர் முனைவர் இரா.அன்பரசி அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்.விழாவில் உலகத் தமிழ் நெறிகள் கழகத்தின் 2026 ஆண்டிற்கான நாள்காட்டி ,உலகத் தமிழ்க் கழகம் வெளியிட்ட தமிழ் திங்கள் காட்டிகளை தமிழ் வளர்ச்சித் துறைக்கு துணை இயக்குநர் அவர்களிடம் குறளாசான் முனைவர் அன்வர் பாட்சா அவர்கள் வழங்கினார்.

நிறைவாக தமிழ் முழக்கப் பதாகைகள் ஏந்திய வண்ணம் தமிழ் முழக்கத்தை அனைத்து தமிழறிஞர்கள் மற்றும் சான்றோர் பெருமக்கள் முழங்கினார்கள்.

விழாவில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், தமிழறிஞர்கள், திருக்குறள் நுண் பயிற்சி வகுப்பு உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைப் சிறப்பித்தனர்.

அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பெற்றது.

நிறைவாக நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

 


Post a Comment

0 Comments