
தேவையானவை

1/ கிலோ மட்டி.
1/4 கிலோ கறிமிளகாய்
1/ தக்காளி.
3/பெரிய வெங்காயம்
2/ பச்சமிளகாய்
2/முட்டை வெள்ளைக்கரு.
15/ காரமான பட்டமிளகாய்
1/தேக்கரண்டி சிறு சீரகம்
1/ கைப்பிடி கறிவேப்பிலை
தேவைக்கு ஏற்ப உப்பு, மஞ்சள்.
தாளிக்க பொரிக்க எண்ணெய்.
செய் முறை

சீரகம் -பட்டமிளகாய்
இரண்டையும் பவுடர் பண்ணவும்.
கறிமிளகாயைக்
கீறிவிட்டு தண்டை நீக்கி பொரித்து
எடுத்து எண்ணெய் வடிய விடவும்.
மட்டியை சுத்தம் செய்து
உப்பு மஞ்சள் முட்டையின்
வெள்ளைக் கரு சேர்த்து (10)
நிமிடம் உறவிட்டு பொரித்து எடுக்கவும்
(பொரிக்கும் போது மூடி பொரிக்கவும்)
தக்காளி, வெங்காயம் பச்சைமிளகாய்
இவைகளை நீள் வடிவில் வெட்டவும்
பின்னர் சட்டியை அடுப்பில் வைத்து
தாளிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும் சிறுது நேரத்துக்கு பின் பச்ச மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும் அதனுடன் உப்பு மஞ்சள் சேர்க்கவும் நன்றாக வதங்கியதும் பொரித்த மட்டியை போட்டு அதனுடன் பொடி செய்த சீரகம் பட்டமிளாகாயை சேர்த்து வதக்கவும் மிளகாய் வாசம் போய் நறுமணம் வரும் போது பொரித்த கறிமிளகாய் கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து பிரட்டி எடுக்கவும்
( டிக்கான கறிபோல் வைக்க விரும்புவோர் பொடி மிளகாயை தவிர்த்து சாதாரண கறிப் பவுடர் போட்டு இறக்கும் போது கட்டிப் பால் விட்டு மல்லித்தழையும் போட்டு இறக்கவும்)
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments