பெருமழையில் கல்லறைத் தோட்டத்தில் சிக்கி,
விழுந்த மரத்திற்குக் கீழே உதயா
மதிமயங்கித் தண்ணீரில் ஊறிய வாறு
மிதந்திருந்தார்! அந்த இளைஞரைத் தோளில்
சுமந்துகொண்டு தானியங்கி வண்டியில் ஏறி
மருத்துவம் பார்க்கவைத்த காவல் துறையின்
பெருமைக் குரியபெண் ஆய்வாளர் செய்த
மனிதநேயப் பண்பினை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்


0 Comments