
முறையான நித்திரையும், நித்திரை விட்டு எழும்புவதும் உங்களுடைய ஆரோக்கியத்தில் முக்கியமான ஒரு பங்கு என்பதை அநேகர் புரிந்து கொள்ளாமல், இதில் விடும் தவறுகள் உங்களுடைய ஆரோக்கியத்தை நிச்சயமாக பாதிக்கின்றது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
நித்திரையும் அதன் முக்கியத்துவமும் பற்றி நவீன மருத்துவம் விளக்கங்களை கொடுப்பதற்கு முன்பாக ஆயுர்வேத யுனானி சித்த மருத்துவ அடிப்படைகளில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் யுனானி மருத்துவ அடிப்படையில் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய ஆறு அம்சங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது அதில் ஒன்றாக நித்திரையும் விழித்திருத்தலும் என்ற அடிப்படையில் நீண்ட விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நவீன வாழ்க்கை அமைப்பில் மனிதனுக்கு நித்திரை செய்ய குறித்த நேரம் கிடையாது. நித்திரை விட்டு ளன எலும்பவும் குறித்த நேரம் கிடையாது. அல்லது நித்திரை விட்டு எலும்பஒரு நேரத்தை வைத்திருந்தாலும் தூங்குவதற்கு சரியான ஒரு நேரத்தை வைப்பதில்லை. ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒவ்வொருவரும் சரியாக ஆக குறைந்தது ஆறரை மணித்தியாலங்கள் முறையான நித்திரையை பெறவேண்டும் அவ்வாறு தவறும்பட்சத்தில் அது நீண்டகால அடிப்படையில் எங்கள் உடம்பில் ஏற்படுத்துகின்ற இரசாயன மாற்றங்கள் காரணமாக எங்களை நோய்களுக்கும் தள்ளிவிடும்.
ஆரம்ப காலங்களில் அதாவது ஒரு ஐம்பது நூறு வருடங்களுக்கு முன்பாக மக்களுடைய வாழ்க்கை முறையில் நேர காலத்தோடு இரவு சாப்பாட்டை எடுத்துவிட்டு தூங்கி விடுவார்கள். காலையில் அதாவது நேர காலத்தோடு எழுந்து அவர்களுடைய வேலைவெட்டி களை கவனிப்பார்கள் இது அவர்கள் இயல்பான வாழ்க்கையில் பின்பற்றிய விடயம் .ஆனால் இதற்குள் அவர்களுடைய ஆரோக்கியத்தின் பெரும்பகுதி மறைந்து இருந்தது என்பதை இன்று நாங்கள் அனுபவிக்கும் ஆரோக்கிய கேடுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
நித்திரையும் விழித்திருதலும் பற்றிய தெளிவு இல்லாததன் காரணமாக சாதாரணமானவர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் தான் படிக்கின்ற மாணவர்களும் தான் பாரிய பிரதிகூலங்களை அனுபவிக்க வேண்டி நேர்ந்துள்ளது.
தற்பொழுது தூக்கமும் விழித்திருப்பதும் தொடர்பாக பாரிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன .அவற்றிலே எங்களுடைய மூளையில் சுரக்கின்ற சுரப்புகள் தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையில் ஆற்றுகின்ற பங்குகள் எத்தகையது, இவற்றில் பிழை ஏற்படும் போது என்னென்ன விடயங்களை பாதகமாக ஏற்படுத்துகின்றதன.
ஒருவருடைய சிந்தனைத் திறன் செயல்பாடுகள் ஞாபக சக்தி அறிவுக்கூர்மை உற்சாகம் போன்றவற்றில் இவை எத்தகையப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றதன என்பதை கண்டறிந்துள்ளார்கள்.
சிறுகுழந்தைகள் சிறுவர்களை தவிர மற்றவர்கள் அதிகம் தூங்குவதும் அதிகம் விழித்திருப்பதும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. பொதுவாக இரவு எட்டு மணி அளவில் நித்திரைக்கு சென்று விடியற்காலையில் அதாவது நான்கு,அல்லது ஐந்து(4-5) மணி அளவில் எழுந்திருப்பது மிகவும் ஆரோக்கியமானதாக காணப்படலாம்.
எங்கள் உடம்பில் அமையப்பெற்றுள்ள பினியல் சுரப்பி என்பவற்றின் மூலம் சுரக்க படுகின்ற முக்கிய ஹோமோன் ஆகிய மெலடோனின் (Melatonin) ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றது.
மெலட்டோனின் என்ற ஹோமோன் ஆனது நாங்கள் நித்திரை செய்யும் போது இருளிலே கண்களில் ஒளி படாத போதே கண்களிலிருந்து பினியல் பகுதிக்கு செல்கின்ற சமிக்ஞை மூலம் அந்த ஹோமோன் சுரக்கப்படுகிறது. இது எங்களுடைய சுகமான நித்திரைக்கு உதவுவதோடு நாங்கள் எந்த நேரத்தில் விழிக்க வேண்டும் என்று மனதில் முடிவுசெய்து தூங்குகிறோமோ அந்த நேரத்தில் அல்லது நாங்கள் நித்திரை விட்டு எழ வேண்டும் என்று பழக்கப்பட்டு உள்ள நேரத்துக்கு எங்களை எழுப்புவதற்கும், அது போல் இன்னும் பல ஹோமங்களை கொன்றோல் பண்ணுவதற்கும் காரணமாக அமைகிறது.
ஞாபக சக்தியை மேம்படுத்தவும் இந்த மெலட்டோனின் காரணமாக அமைகின்றது இந்த மெலட்டோனின் கற்கை விடயங்களில் உள்ளவர்களுக்கு சரியான முறையில் செயல்பட வேண்டும்.
கோட்டிசோல் (cortisol)
என்பது ஸ்டீரொய்ட் ஹோமோன் ஆகும் ஆகும்.
இந்த ஹோர்மோன் உடல் இயக்கங்களில் முக்கியமான செயல்பாடுகளை செய்கின்றது. இது உடலின் அதிரீனல் சுரப்பியினால் சுரக்கப்படுகிறது. நோயெதிர்ப்பு மண்டலம், சமிபாட்டுத்தொகுதி, மன அழுத்தங்களை குறைத்தல், விவேகமாக சிந்தித்தல், தேவையான முடிவுகளை எடுத்தல், சிக்கலான விஷயங்களில் தீர்வு காணுதல், ஒரு விடயத்தில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள உதவுதல், மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க பார்த்துக் கொள்ளுதல், இருதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைத்தல், போன்ற முக்கியமான விடயங்களில் பங்கு கொள்கிறது.
மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டில் இருக்கும் போது கோட்டிசோல் செயல்பாடு குறைவாக காணப்படும். மெலடோனின் குறையும் போது அதாவது நித்திரை விட்டு எழும்பும் போது கோட்டிசோல் செயல்பாடு கூடும். காலையிலேயே நாங்கள் நித்திரை விட்டு எழும்பி சுமார் ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை மணித்தியாலங்கள் செல்லும்போது இந்த செயற்பாடு நன்றாக செயல்படும் .இந்த செயல்பாடு மந்தமானால் அன்றைய நாளில் எங்களுடைய செயல்பாடுகள் உற்சாகமானதாக இருக்காது. இதனை நாங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடிய விடயம் தான் நேர காலத்தோடு தூங்கி விடியற்காலையில் விழித்தால் அந்த நாள் ஒரு சுறுசுறுப்பான நாளாக இருக்கும் அதற்கு மாற்றமாக நடந்தால் உடல் ஒரு பெரிய வித்தியாசத்தை காட்டும் .இதனால் நாங்கள் தெரிந்து கொள்ளக் கூடிய விடயம் என்னவென்றால் இந்தக் ஓமோனின் அல்லது இந்த இரண்டு ஓமோன்களின் செயற்பாடுகள் சிக்கல் அடையும் போது எங்களை அவை நன்றாகவே பாதிக்கின்றது என்பது தான்.
ஆகவே இங்கே விசேடமாக நான் மாணவர்களை குறிப்பிட்டு கூறுவது, தமது கற்கை விடயங்களுக்காக இரவு விழித்திருந்து தூக்கத்தை பாழாக்கி பாடங்களை பார்த்து தூங்கியபின், விடியற்காலையில் எழுந்து நிற்காமல் நேரம் தாழ்த்தி எழும்பும்போது நீங்கள் கற்றவை களிலோ அல்லது செய்தவை களிலோ எந்த பிரயோசனமும் இல்லை. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை கெடுத்து உங்களுக்கு ஒரு தீங்கு செய்துகொள்வது அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. மனித உடலுக்கும் ஒரு ஓய்வு தேவை.
அதுபோலவே எங்களுடைய மூளைக்கும் தேவையான ஓய்வு தேவை. அந்த ஓய்வு இல்லாமல் மூளை களைப்படையும் போது நாங்கள் கற்பவைகள் அனைத்தும் பிரயோசனமற்றதாக மாறிவிடும். ஆகவே நேர காலத்தோடு மூளைக்கு ஓய்வு கொடுத்து காலையில் எழுந்திருக்கும் போது அந்த மூளை அடுத்த நாள் காரியத்திற்காக தன்னை புதுப்பித்துக் கொண்டு உஷார் நிலையில் காணப்படும். அப்போது நாங்கள் கற்பவை செய்பவை நல்லதாக மனதில் பதியக் கூடியதாக மாறிவிடும். மாணவர்களுக்கு நேர காலத்தோடு தூங்கி விடியற் காலையில் எழும்பி தன்னுடைய கற்கை நடவடிக்கைகளை செய்வது மிகமிக பிரயோசனமா னதாகவும் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெறக் கூடியதாகவும் இருக்கும்.
இரவு தூங்கும்போது விளக்குகளை அனைத்து விட்டு தூங்குவது கூட நல்லது. ஏனென்றால் அந்த இருளானது இந்த மெலட்டோனின் சுரப்புக்கு உதவக் கூடியதாக இருக்கும். மேலும் சில நோயாளர்கள் இரவில் நித்திரை இல்லாமல் கஷ்டப்படுவார்கள் .அதற்குரிய தீர்வாக வைத்தியரினால் நித்திரை மாத்திரைகள் கொடுக்கப்படும் அந்த வில்லைகள் கூட சிலவேளை பயனற்றதாக காணப்படும். நித்திரை இன்மை இந்த நோயாளர்களை மேலும் மேலும் சிரம படுத்துவதாக அமையும் .இதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது அதாவது இந்த மெலட்டோனின் ஹோமோன் சுரப்புக்கு விட்டமின் D தேவைப்படுகின்றது .
சில நோயாளர்களில் இந்த விட்டமின் D குறைபாடு காணப்பட்டால் அது நோயாளியாகவோ அல்லது ஆரோக்கியமானவர்களிள் கூட இந்த விட்டமின் டி குறைபாடு ஏற்படலாம். இவ்வாறன குறைபாட்டின் போதே இந்த மெலடோனின் சுரக்கப் படாமல் நித்திரை வராது. அவர்களுக்கு நாங்கள் அந்த விட்டமின் D அடங்கக்கூடிய பால் முட்டை உரிய மரக்கறி வகைகள் பழ வகைகள் என்பவற்றை வழங்கவேண்டும். அதற்கும் மேலாக தேவைப்படின் வைத்திய ஆலோசனையுடன் அந்த விட்டமின் D சப்ளிமெண்ட் வழங்கப்பட வேண்டும் .இவை எல்லாவற்றையும்விட சரளமான ஒரு விடயமாக நோயாளர்களை கட்டிலில் மட்டுமே படுக்க வைக்காமல் அவர்களை காலை நேரத்தில் அதாவது காலை ஏழு மணி எட்டு மணி நேர அளவில் சூரிய ஒளி படுமாறு அவர்களுக்கு சன் பாத் வழங்கப்பட வேண்டும் இதன்போது எங்களுடைய இயற்கையான வழியில் தோலின் மூலம் விட்டமின் டி உற்பத்தி செய்யப்படுவது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக காணப்படும். இதனையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாம் விஞ்ஞான ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் நோக்குவது ஒருபுறம் இருக்க 1400 வருடங்களுக்கு முன் எங்கள் மா நபி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எங்களை படைத்த ரப்பு அல்லாஹ் அருள்மறையில் கூறியவற்றையும் நாங்கள் ஆழ்ந்து புரிந்து கொள்ளாமல், ஓதுவதற்காக அல்லது வாசிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தி உள்ளோம் என்பதையும் கீழே உள்ள ஆயத்துக்கள் ஹதீஸ்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியுமாக இருக்கின்றது.
அத்தியாயம் 10: வசனம் 67.
நீங்கள் சுகம் பெறுவதற்காக இரவையும் (நீங்கள் எல்லாவற்றையும் தெளிவாகப்) பார்ப்பதற்காக பகலையும் உங்களுக்கு அவனே ஆக்கினான். அவனுடைய வசனங்களுக்குச்) செவிசாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
அத்தியாயம் 28: எட்டு வசனம் 73
இரவையும் பகலையும் நீங்கள் இளைப்பாறுவதற்கும் நீங்கள் அவனுடைய அருளைத் தேடி கொள்வதற்கும் உங்களுக்கு அவன் ஏற்படுத்தி இருப்பதற்கு அவன் கிருபை தான் காரணம். இதற்காக நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக.
அத்தியாயம் 40 வசனம் 61.
அல்லாஹ் தான் நீங்கள் இளைப்பாறிச் சுகம் அடைவதற்காக இரவையும் வெளிச்சத்தால் பலவற்றையும் நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் சிருஷ்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பேரருள் புரிகின்றான் ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் நன்றி செலுத்துவதில்லை.
அத்தியாயம் 17 வசனம் எழுபத்தி எட்டு
நபியே சூரியன் சாய்ந்ததில் இருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர் அஸர் மஃரிப் இஷா )ஆகிய நேரத் தொழுகைகளை தொழுது வாரும். ஃபஜர் தொழுகையையும் தொழுது வாரும். ஏனென்றால் நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது இருதயத்தில் பிரகாசத்தையும் சாந்தியையும் உண்டாகும்.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிரந்தங்களில் வந்துள்ள ஹதீஸ்களையும் நாம் பார்ப்போம்.
இரவு உணவு தயாராகி இஷாவுக்கு அதான் கூறப்பட்டால் நீங்கள் முதலாவது சாப்பிடுங்கள். சாப்பிட்டு முடியும் வரையும் அவசரப்பட வேண்டாம் அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி)ஆதாரம் முஸ்லிம்.
நபிகள் நாயகம் (ஸல்)இஷாவுக்கு முன் தூங்குவதையும் வெறுத்து இருக்கிறார்கள். இஷாவுக்கு பிறகு பேசிக் கொண்டிருப்பதையும் வெறுத்து இருக்கிறார்கள்.
ஆதாரம் புகாரி 547 வது ஹதீஸ்.
யா அல்லாஹ் உம்மத்துக்கு அதிகாலைப் பொழுதில் அபிவிருத்தி செய்வாயாக என்று நபி (ஸல) அவர்கள் பிரார்த்தித்ததாக அலி ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் அஹ்மத் அபூதாவூத்.
நபி (ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு படையை அனுப்புவதாக இருந்தால் காலைப்பொழுதில் அனுப்புவார்கள்.
ஆதாரம் இப்னு மாஜா 22 36 அபூதாவுத்2606 திர்மிதி 1212.


0 Comments