Ticker

6/recent/ticker-posts

ஏசி இயந்திரத்தினை பழுதுபார்க்க உள்ளே கைவிட்ட நபர்-கடைசியில் நடந்த பரிதாபம்

சென்னையில் ஏசி இயந்திரத்தினை பழுதுபார்க்க உள்ளே கைவிட்டவரை பாம்பு ஒன்று கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் வா.உ.சி தெருவில் வசித்த ஸ்ரீதரன் என்பவர் தனது வீட்டின் ஏசி இயந்திரத்தில் இருந்து எலி ஒன்று இறந்து கீழே விழுந்ததை அவதானித்துள்ளார்.

இந்நிலையில் இயந்திரத்தினுள் கையை விட்டு வேறு ஏதேனும் இருக்கின்றதா என்று பார்த்தில் உள்ளே வயர் போன்று எதோ கையில் சிக்கியதையடுத்து அதனை வெளியே இழுத்துள்ளார்.

அப்போது உள்ளே இருந்த நல்ல பாம்பு ஒன்று கையில் கடித்துவிட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரைக் கடித்த பாம்பினை தீயணைப்பு துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஸ்ரீதரனின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

AC வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு
இன்று பலரின் வீட்டில் மிகவும் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது AC. ஆம் அந்த அளவிற்கு வெப்பநிலை அதிகரிப்பதால் பலரும் இதனை தங்கள் வீடுகளில் மாட்டி வைத்துள்ளனர்.

நாம் இருக்கும் அறைக்கு ஏற்ப தான் ஏசியை வாங்க வேண்டுமாம். குறிப்பாக 100 சதுர அடிக்கு 1 டன், அதற்கு மேல் ஒன்றரை டன், பெரிய அறைக்கு 2 டன் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஏ.சி பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை.



AC வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டியவை
வீட்டில் ஏசி பயன்படுத்துபவர்கள் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற ஸ்டெப்லைசர் தான் பயன்படுத்த வேண்டும்.

குளிர்காலத்தில் பயன்படுத்தாமல் இருந்த ஏசி இயந்திரத்தினை பின்பு சர்வீஸ் செய்து தான் பயன்படுத்த வெண்டும்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் சர்வீஸ் செய்ய வேண்டும்.

மேலும் அதிக மின்சார வாட்ஸ் தாங்கக்கூடிய தரமான பிளக், சுவிட், கேபிள் இவற்றினை பயன்படுத்த வேண்டும்.

 இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் அதனை அதற்குரிய சர்வீஸ் செய்யும் நபர்களை அழைத்து தான் சர்வீஸ் செய்யவும்.

அறையின் அளவிற்கு ஏற்ற ஏசியை பயன்படுத்துவதோடு, அவ்வப்போது பரிசோதிக்கவும் செய்ய வேண்டும்.

AC வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதவை
மலியான விலையில் கிடைக்கும் தரமற்ற ஸ்டெப்லைசரை பயன்படுத்தக்கூடாது.

பல நாட்கள் பயன்படுத்தாமல் இருந்த ஏசியை சர்வீஸ் ஏதும் செய்யாமல் அப்படியே பயன்படுத்துதல் கூடாது.

ஏசி குறித்து முன்பின் தெரியாமல் இருப்பவர்கள் சர்வீஸ் செய்வதை தவிர்க்கவும்.

அறையின் அளவு பெரிதாக இருந்தால் குறைந்த செயல்திறன் கொண்ட ஏசியை பயன்படுத்துதல் கூடாது.


Post a Comment

0 Comments