14- 11 -2021 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக சான்றோர் சந்திப்பு விழா நிகழ்ச்சி., சென்னை, இராயப் பேட்டை., இந்திய அலுவலர்கள் சங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத் தலைவர் முனைவர் கோ.பெரியண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.முனைவர் கி.ஈஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.சங்கச் செயலாளர் முனைவர் இதயகீதம் இராமானுஜம் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.
குவைத் தொழில் அதிபர் டாக்டர் எஸ்.எம் ஹைதர் அலி அவர்களுக்கு தங்கத் தமிழ் மகன் விருது சென்னை இராணி மேரி கல்லூரி முதல்வர் திருமதி சுடர்க்கொடி கண்ணன் அவர்களால் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர் தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்களுக்கும் சிறப்பு செய்தனர்.அவர் ஏற்புரை ஆற்றினார்.
திருமதி இராஜமாதா கமலாமுருகன்,திருமதி கவிஞர் சாந்தி, முனைவர் பூங்கோதை ,கவிஞர் சண்டமாருதம்,கவிஞர் பழனி,கவிஞர் ஜெயஸ்ரீ.,கவிஞர் வீரரகு.,கவிஞர் நேமிதாசன்.,கவிஞர் சிவபரமசிவம்., மும்பாய் தமிழ்ச் சங்கத் தலைவர் பாம்பே இராமசாமி உள்ளிட்ட சான்றோர் பெருமக்கள் பலரும் வாழ்த்திப் பேசினர்...
நிறைவாக நன்றி நவிலலுடன் விழா இனிதே நிறைவுற்றது.
முன்னதாக முதல் நாள் 13-11-2021 அன்று திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், டாக்டர் எஸ்.எம். ஹைதர்அலி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


0 Comments