Ticker

6/recent/ticker-posts

Ad Code



பெற்றோரின் நீரிழிவு நோய் பிள்ளைகளையும் தாக்குமா?

எனது வயது 15. எனது தாய் தகப்பன் இருவருக்கும் நீரிழிவு நோய் பல வருடங்களாக உள்ளது. அதைத் தொடர்ந்து எனது இரு சகோதரர்களுக்கும் இந்நோய் ஏற்பட்டுள்ளது. என்னையும் இந்நோய் | பீடிக்குமா என பெரும் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக் கிறேன். இந்நோய் வராமலிருக்க ஏதாவது தகுந்த அறிவுரைகளை வழங்கவும்.
கவுஸ், சாய்ந்தமருது

நீரிழிவு அல்லது சிளி நோய் என்பது எமது அன்றாட வாழ்க்கை முறைக ளோடும் பழக்கவழக்கங்களுடனும் சூழல் காரணிகளுடனும் நேரடியாகத் தொடர்பு டைய ஒரு நோய் நிலையாகும். நீரிழிவு நோய் வராமல் தடுப்பதாயின் இயற்கை உணவுகளை இயற்கை விதிமுறைகளுக் கேற்ப தயாரித்து உட்கொள்வதும் சுறு சுறுப்பானதும் மன நிம்மதியானதுமான வாழ்க்கை முறையைக் கையாள்வதும் முக்கியமாகும்.

உணவைப் பொறுத்தவரையில் பல இரசாயனப் பொருட்களடங்கிய செப்ப னிட்டப்பட்ட இயற்கை விதிமுறைகளுக்கு மாறாகத் தயாரிக்கப்பட்ட உணவு வகை களே 21 ஆம் நூற்றாண்டின் முதன்மை யான உணவு வகைகளாக இருக்கின்றன. 

இன்றைய உணவுகள் கண்ணுக்குக் கவர்ச் சியாக, நறுமணம் மிக்கதாக, அதிக சுவை யுடையதாக இருக்கின்றன. ஆனால் பல நிறங்களில் உள்ள உணவு வகைகளைக் கண்டு கண் மாத்திரம் தான் திருப்தியடை வதுடன் நிறப்பொருட்களினால் உடம் புக்குத் தீங்கு ஏற்படுகின்றதே தவிர எது விதமான நன்மைகளும் ஏற்படுவதில்லை.

அதே போன்று நறுமணத்திற்காகவும் சுவையூட்டுவதற்காகவும் வேண்டியும் சேர்க்கப்படுகின்ற இரசாயனப் பதார்த் தங்கள் மூலம் முறையே மூக்கும் நாவும் திருப்தியடைகின்றதே தவிர இவைகள் உடம்புக்கு பாரிய தாக்கங்களையே ஏற்ப டுத்துகின்றன. போதைப் பொருட்களுக்கு உடம்புக்கு பாரிய தாக்கங்களையே ஏற்ப டுத்துகின்றன, போதைப் பொருட்களுக்கு அடிமையாவதைப் போன்று இன்றைய சந்ததியினர் Fast Foods களுக்கு அடிமை யாகியுள்ளனர். என்பதே உண்மை . இதன் விளைவு தான் நீரிழிவு நோய் உட்பட அதி கரித்துவரும் தொற்று நோய்கள். 
நாம் எமது வீடு வாகனம் போன்ற வற்றின் நலனில் மிகவும் அவதானமாக உள்ளோம். ஆனால் ஒரு அதிர்ச்சியான விடயம் என்னவென்றால் நாம் எமது அல் லது எமது பிள்ளைகளின் உடல் நலத்தில் எதுவிதமான அக்கறையும் எடுக்கின்றோம் இல்லை என்பதாகும்.

உதாரணமாக பெற்றோலில் கலப்படம் ஏற்பட்டுள்ளது என்ற செய்தி எமக்குக் கிடைத்தால் வாகனத்திற்கு ஏதும் பிரச் சினை ஏற்பட்டுவிடும் என எண்ணி பெற்றோல் ஊற்ற மாட்டோம் அல்லவா? ஆனால் தற்போது விற்பனையிலுள்ள கவர்ச்சியான நறுமணமிக்க பல வர் ணங்களில் தயாரிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களடங்கிய பொருட்களை நாமும் உட்கொண்டு எமது பிள்ளைகளுக்கும் கொடுக்கின்றோம் அல்லவா? இதன் விளைவுகளில் ஒன்று தான் சிறுவர்க ளையும் பீடிக்கக் கூடிய நீரிழிவு நோய்.

அத்துடன் மேற்கூறிய Fast Foods கள் அதிக கலோரித் தன்மையும் அதிக மிருகக் கொழுப்பும் கொண்டவை. இவைகளைத் தொடர்ந்தும் சாப்பிடும் போது உடல் பருமன் கூடி இறுதியில் நீரிழிவு நோயை ஏற்படுத்தும். எனவே Fast Foods உட் கொண்டால் எமது வாழ்க்கைப் பயணமும் Fast ஆகத் தான் இருக்கும். 

உணவுக்கு அடுத்ததாக உடற்பயிற் சியின்மையும் நீரிழிவு நோய் ஏற்படு வதற்கான முக்கிய காரணமாகும். நாம் உட்கொள்ளும் சத்துப் பொருட்களான மாப்பொருள், புரதம், கொழுப்பு போன்ற வைகள் எமது உடம்பில் அதிகளவு தேங்கி உடற் பருமன் கூடாமல் இருக்க வேண்டு மானால் தொடர்ச்சியான உடற்பயிற்சி மிக மிக முக்கியமாகும். 

மன அழுத்தத்துடன் கூடிய வாழ்க்கையும் நீரிழிவு நோயை ஏற்படுத்தக் கூடியது.

இங்கு கேள்வி கேட்டிருப்பவரும் தனது பெற்றோர்களுக்கு நீரிழிவு நோய் இருப் பதாகவும் அது தன்னையும் பீடிக்கலாம் என்ற பீதியுடன் இருப்பதாகவும் புலப்ப டுகின்றது. பெற்றோர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் அது பிள்ளைகளையும் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.

ஆனாலும் பெற்றோர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதால் அது எங்களையும் தாக்கும் என தினமும் நினைத்து கவலைப் பட்டு நோயின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் மன அழுத்தம் காரண மாக கூடிய சீக்கிரம் நீரிழிவு நோய் ஏற் படும். மாறாக பெற்றோர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதால் நாம் உணவில் கட்டுப் பாடாக இருந்து தொடர்ச்சியான உடற்ப யிற்சியிலும் ஈடுபட்டு மன அழுத்தமற்ற வாழ்க்கையையும் மேற்கொண்டால் இந்நோய் பிள்ளைகளைத் தாக்குவது அரிது.

மேற்கூறிய காரணிகளுக்கு மேலாக பல மணி நேரம் உட்கார்ந்து செய்யக் கூடிய தொழில், சிறுவயதில் ஏற்படக்கூடிய போசாக்கின்மை, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடைதல், மதுபானம், வைரசுக் களின் தாக்கம் , சில மருந்துகள் போன்ற வைகளும் நீரிழிவு நோயை ஏற்படுத்தக் கூடியவை.

நீரிழிவு நோயைப்பற்றிய ஒரு முக்கிய மான விடயம் தான் அது சகாப்தங்களுக் குமுன் இந்நோய் உயர்ந்த வாழ்க்கைத் தரமுடையவர்களையே தாக்கியது. ஆனால் இன்று குறைந்த வாழ்க்கைத் தரமுடையவர்களையும் தாக்குகின்றது. காரணம் அதிகரித்து வரும் குடும்பப் பிரச் சினை மூலம் ஏற்படும் மன அழுத்தம், போசாக்குக் குறைவு, பொருளாதாரப் பிரச் சினை போன்றவைகளாகும்.

ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள் ளது என நிரூபிக்கப்பட்டால் முதலில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைக் கடைபிடித்து நீரி ழிவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதிக உடற் பருமனுடையவர்கள் உடல் நிறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் நீரிழிவு நோயைத் தடுக்கலாம்.

மேற்குறிப்பிட்டவைகளுக்கு குருதியில் சீனியின் அளவு குறையாவிட்டால் பக்க விளைவுகளற்ற மூலிகையினால் தயாரிக் கப்பட்ட மருந்து வகைகளைப் பாவித்து நீரிழிவையும் உடல் நிறையையும் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இவைகளையும் மீறி குரு தியில் சீனியின் அளவு கூடினால்தான் நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைப் பாவிக்க வேண்டும். 

எனவே இங்கு கேள்வி கேட்டிருக்கும் சகோதரரும் மேற்கூறியவைகளைக் கடைபிடித்தால் இன்ஷா அல்லாஹ் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். 

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக, அதாவது உங்களது வாழ்க்கையை உடல் ரீதியாகவும் உள் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சீரழிக்கும் நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்ளும் படி வேண்டுகிறேன்.

நீர் அழிவதற்கு நீரிழிவும் ஒரு முக்கிய காரணமாகும்.

DR.NASEEM

Post a Comment

0 Comments