Ticker

6/recent/ticker-posts

ஆடு நனையுதென ஓநாய் அழுகின்றதாம் மூழ்கிப் போன முஸ்லிம் அரசியல் !


நாட்டில் தனித்துவம் பேசி அரசியலில் நுழைந்து, பேரினவாதத்தை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அவ்வப்போது அரசியல் மேடைகளில்  பேரினவாதிகளின் அரசியல் இனவாதத்தில்  குளிர்காய்ந்து, முஸ்லிம் அரசியல் கட்சிகள்  தற்போது  அழிவடையும் நிலையை அடைந்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும், அரசியல் மேடைகளில் இனவாதத்தை பேசி பாராளுமன்றம்  நுழைந்த இவர்கள்,  அவ்வப்போது பதவிக்கு வரும் அரசாங்கங்கள்ளுடன் சேர்ந்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை விற்று,   சுய லாபம் அனுபவித்தனர்.  இதனால் முஸ்லிம் மக்களும்  இவர்களின் துரோகத்தனமான  முஸ்லிம் அரசியல் கட்சிகளை  வெறுத்து ஒதுக்கும் நிலை  ஏற்பட்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் இலங்கையில் ஒரு முஸ்லிம் கட்சி உறுப்பினர் கூட தேர்தலில் ஜெயிப்பது சந்தேகமாகவுள்ளது .

இந்நிலையில் ஒரு சில  பேரினவாதிகளின் அரசியல் லாபங்களில்  ஏமாற்றமடைந்த பெரும்பான்மை மக்களும் இன்று உண்மையை விளங்கி எதிர்காலத்தில் இனவாதிகளை ஒட்டு மொத்தமாக  அரசியலில்  இருந்து வெறுத்து ஓரங்கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை கடந்த காலங்களில் இனவாதத்தை கக்கிய மத குருக்களுக்கும், மற்றும்  இனவாத அரசியல் வாதிக்களுக்கு மாற்று மத மக்கள்  வழங்கும் பதில்களில் இருந்தும், வரவேற்பில் இருந்தும் இதை அறிய முடிகின்றது.

எனவே  இதுவரை இனவாதம் பேசி, பேரினவாதிகளின் இனவாதத்தை பயன்படுத்தி அரசியல் செய்த முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு  எதிர்கால அரசியல்  சூனியம்மாகவே காணப்படுகின்றது.

இவர்கள் எதிர்காலத்தில் இனவாதம் பேசி வாக்கு சேகரிக்க முடியாது. மக்களிடம் செய்த சேவைகளை  முன்வைத்து வாக்கு கேட்கும் அளவுக்கு சமூகத்திற்கு  துரோகத்தை தவிர எந்த சேவையும் இதுவரையில்  இவர்கள் செய்ததில்லை.

எனவே தற்போது மூழ்கப் போகும் இவர்களது முஸ்லிம்  அரசியல் படகை மீண்டும் மீட்டெடுக்க  வடகக்கு கிழக்கு காணிப்பிரச்சினை இவர்களால் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை உள்ளது.
ஆனால் இதை பூதாகரமாக்கி விவாத மேடைகளாக ஆக்கி  வீண் விவாதம் செய்வதால்  முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.  இதனால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகி  இவர்களின்   அரசியல் ஆதரவு தேடுவதை  தவிர எந்தவிதமான பிரயோசனமும்  முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படப்போவதில்லை.

எனவே இவர்களின் இவ்வாறான செயலைக் கொண்டு இவர்களின் பகுதியி்ல் அரசியல் லாபம் அடையமுற்படுவதனால் இச்செயல் நாட்டின் ஏனைய பகுதியில் உள்ள முஸ்லிம்களின் இருப்பையும் ஏனைய சமூகத்தினருடன்  உள்ள  அந்நியோன்யமான உறவையும் பாதிக்கும் என்பதையும் இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு காணிப் பிரச்சினை என்பது அதிகாரங்களுக்கு மத்தியில்  இரு  சமூகங்களும்  ஒன்றிணைந்து தீர்வு காணப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாகும். இதை விவாத மேடை ஆக்கி  ஒரு சிலர் இதில் அரசியல் லாபம் தேட முற்படுகின்றனர்.  விவாதமேடை அழைப்பு முதலில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால்  விடுக்கப்பட்டது.  இவர் மக்கள் மத்தியில் எந்தவித ஆதரவும் இன்றி,  பல முஸ்லிம் உரிமைகள் விடையத்தில் அரசுக்கு வக்காலத்து வாங்கியவர்.  ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட  போது அரசுக்கு எதிராக குரல் கெடுக்காமல் , அரசாங்கத்தை கண்டிக்காமல்  ஜனாஸாக்கள் எரிக்கப்படவில்லை  பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டது என்ன முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி அரசுக்கு வக்காலத்து வாங்கியவர்.

எனவே முஸ்லிம் சமூகம்
சம்மந்தமாக இவர் எந்தவிதமான அக்கறையும் அற்றவர். அரசியலுக்காக காணிப் பிரச்சினையை முன்வைத்து தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் இன்னொரு பிரச்சினையை ஏற்படுத்தி  அதில் குளிர்காய முயற்சிகின்றார் என்பது   தெளிவாக தெரிகின்றது.  ஆகவே முஸ்லிம் சமூகம் இவரது இவ்வாறான  சதி வலையில் சிக்கிக்கொள்ளாமல் புத்தி   சாதுரியத்துடன் இந்த விடயத்தை கைக்கொள்ள வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தினால் ஒதுக்கப்படும் நிலையில் உள்ள இவர்களுக்கு மீண்டும்  இனங்களுக்கு மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தி இவர்களின் வங்குரோத்து அரசியலை  செய்ய இடமளிக்கக்கூடாது.

வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையை என்பது இன்று நேற்று ஏற்பட்ட ஒரு பிரச்சனை அல்ல.  உண்மையில்  முஸ்லிம் சமூகத்திற்கு இவ்வாறான ஒரு அக்கறை இவருக்கு இருக்குமேயானால் இதை  விவாத மேடைகளுக்கு கொண்டுபோய் இரு இனங்களுக்கிடையிலும் வீண் பிரச்சனைகளை  உண்டு பண்ணாமல், உரிய அதிகார தரப்பின் கவனத்தின் முன்  இரு சமூகங்களையும் ஒன்றிணைத்து  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே   தீர்வுக்கான வழிமுறையாகும்.

அவ்வாறு ஒற்றுமையான முறையி்ல் அவற்றை பேசித்தீர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் முஸ்லிம் சமூகம் சார்பாக மூன்நிலைபடுத்துவதற்கு இவர்கள் தகுதியற்றவர்கள் என்பதே உண்மை. 

கடந்த காலங்களில் முழு முஸ்லிம் சமூகத்தின் உறிமையையும் எதிர்கால நிம்மதியையும் பற்றி கவலை கொள்ளாதவர்கள், ஒரு பிரதேச மக்களின் நலனில் கவலை கொள்வார்கள்  என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. அதிலும் அவர்களின் சுய நலன் மட்டுமே கருதப்படும் என்பதே உண்மை. 

மாறாக  இவர்கள் முஸ்லிம் அரசியலில்  தற்போது   ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதை  ஊதி பெரிதுபடுத்தி  விவாத மேடைகளாக ஆக்கி   இரு சமூகங்களுக்கு இடையிலும் இருக்கும் ஒற்றுமையை சீர்குலைத்து பிரச்சினைகளை ஏற்படுத்தி
அதில் குளிர் காய்வது இவர்களின் நோக்கம்.  இதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து செயல்பட வேண்டும். 

மீ்ண்டும் நிம்மதியாய் வாழும் மக்களின் நிம்மதியை கெடுத்து இவர்களின் கீழ்த்தரமான அரசியலை மேற்கொள்ள முஸ்லிம் மக்கள் இடமளிக்கக் கூடாது.


Post a Comment

0 Comments