கடந்த காலங்களில் சூடான இனவாதத்தை முஸ்லிம் மக்களிடம் பேசி பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சமூகத்தின் விருப்பங்களுக்கு மாறாக முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் தனி அதிகாரம் கொண்ட 20 வது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
பின்பு முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் வாக்குறுதி அளித்த பின்பு, இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்விடயத்தை பாதாளத்தில் போட்டது.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் வினவியதாகவும், அவர்கள் வைத்த காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை என முடிவு செய்து இவர்களுக்கு உச்ச பீடம் மன்னிப்பு வழங்கியது எனவும் அறிவித்தனர்.
இதேபோன்று இம்முறை செலவுத் திட்டத்திலும் இவ்வாறான ஒரு அறிவிப்பு கட்சித் தலைவர்களால் செய்யப்பட்ட நிலையில், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு தலைவர் பதிலளித்தார் சாணக்கிய தலைவர்.
அதாவது வரவு செலவுத் திட்டத்திற்கு கட்சித் தலைமையின் முடிவை மீறி வாக்களித்தவர்களிடம் அதற்கான காரணங்களை கோறியுள்ளோம், அதன்பின்பு அது சம்பந்தமான முடிவுகளை உச்ச பீடம் மேற்கொள்ளும் எனவும், இது சம்பந்தமாக
ஊடகவியலாளர்கள் தீர்மானிக்க முடியாது எனவும், கேள்வி கேட்ட ஊடகவியலாளருக்கு காரசாரமான பதில் ஒன்றை வழங்கினார்.
இதிலிருந்து இவர்கள் இது சம்பந்தமாக எடுக்கப்போகும் தீர்மானம் என்ன, இலங்கையின் முஸ்லிம் அரசியலில் இவர்கள் நடிக்கும் நாடகத்தின் கருப்பொருள் என்ன என்பது தெளிவாக தெரிகின்றது.
எனவே முஸ்லிம் கட்சி உறுப்பினர்களுக்கான தலைவர்களின் உச்ச பீட மன்னிப்பு எப்போது வெளியாகும் பார்திருப்போம், காத்திருப்போம்.
0 Comments