2022 ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்-அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

2022 ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்-அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

2022 ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.  மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர், வரும் அக்டோபர் 16ந் தேதி தொடங்கி நவம்பர் 13ந்தேதிவரை இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றது. 

அடிலெய்டு, பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதிப் போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், அடிலெய்டு ஓவல் மைதானத்திலும் முறையே நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறும்.  இறுதிப் போட்டி நவம்பர் 13ந்தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. 

போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளன. 

அதேசமயம் நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை முதன்மைச் சுற்றுக்கு முந்தைய தகுதிச் சுற்றுகளில் விளையாடுகின்றன.  இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.  இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது.





வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  

Post a Comment

Previous Post Next Post