“நன்றி, துபாய் காவல்துறை. உலகிலேயே மகிழ்ச்சிமிக்க தந்தையாக என்னை உணர வைத்தீர்கள்-உணர்ச்சிமிகு சம்பவம்

“நன்றி, துபாய் காவல்துறை. உலகிலேயே மகிழ்ச்சிமிக்க தந்தையாக என்னை உணர வைத்தீர்கள்-உணர்ச்சிமிகு சம்பவம்

தம்முடைய குடும்பத்தாரை விட்டு 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர், அவர்களைச் சந்திக்கும் தருணம் அந்த விமான நிலையத்தின் டிரான்சிட் பகுதியில் இடம்பெற்றது.

துபாய் அனைத்துலக விமான நிலையத்தில் உணர்ச்சிமிகு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

தம்முடைய குடும்பத்தாரைச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர துபாய் காவல்துறையினரிடம் அந்த வெளிநாட்டவர் கோரிக்கை விடுத்தார்.

தம்முடைய மனைவியும் மகளும் விமான நிலையத்தின் இரண்டாம் முனையம் வழியாக பயணம் செய்ததாகவும் அவர்களைத் தாம் சந்திக்க விரும்பியதாகவும் அவர் கேட்டுக்கொண்டார்.

“சில தனிப்பட்ட காரணங்களால் 10 ஆண்டுகளாக தம்மால் தம்முடைய குடும்பத்துடன் ஒன்றாக இருக்க முடியவில்லை என்று அந்த ஆடவர் எங்களிடம் விளக்கினார்,” என்றார் விமான நிலையப் பாதுகாப்புப் பொதுத் துறை இயக்குநரான மேஜர்-ஜெனரல் அத்தீக் பின் லஹேஜ்.

ஆசிவைச் சேர்ந்த அந்த ஆடவரின் கோரிக்கையை ஏற்று, விமான நிலையத்தின் டிரான்சிட் பகுதியில் தம்முடைய குடும்பத்தாரை அவர் சந்திக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.

தங்களுடைய கோரிக்கைக்கு இணங்கிய துபாய் காவல் துறைக்கு அந்த ஆடவரும் அவருடைய குடும்பத்தாரும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

“நன்றி, துபாய் காவல்துறை. உலகிலேயே ஆக மகிழ்ச்சிமிக்க தந்தையாக என்னை உணர வைத்தீர்கள்,” என்று அந்த ஆடவர் கூறியதாக காவல்துறை குறிப்பிட்டது.

Post a Comment

Previous Post Next Post