Ticker

6/recent/ticker-posts

Ad Code



சவாட் கிக் குத்துச் சண்டை (Savate Kickboxing) விளையாட்டு போட்டி


கண்டி மாவட்ட மற்றும் மாகாண விளையாட்டு கழகங்களின் ஏற்பாட்டில் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் உள்ள 68 வது தேசிய விளையாட்டான சவாட் கிக் குத்துச் சண்டை (Savate Kickboxing) விளையாட்டு தரப்படுத்தல் மற்றும் பயிற்சி செயமலர்வு கம்பளை தி. மு. ஜயரட்ன கேட்போர் கூடத்தில் கண்டி மாவட்ட விளையாட்டு கழகத்தின் தலைவர் T.M NAUSHAD தலைமையில் இடம்பெற்றது.

மூன்று நாள் நடைபெற்ற இந்த தரப்படுத்தல் மற்றும் பயிற்சியில்  இறுதி தெரிவு நாளன்று பிரதம அதிதியாக கண்டி மாவட்ட சவாட் கிக் குத்துச் சண்டை கழகத்தின் ஆலோசகரும் , கம்பளைத் தேர்தல் தொகுதியின் சமகி ஜன பலவேகய SJB கட்சியின் முஸ்லிம் விவகாரச் செயலாளரும் சமூக, அரசியல் செயற்பாட்டாளருமான சாமஸ்ரீ 
தேசகீர்த்தி 𝐅𝐚𝐳𝐥𝐚𝐧 𝐅𝐚𝐫𝐨𝐨𝐤  கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Post a Comment

0 Comments