கம்பனின்கைப்பற்றி பாலகாண்டம்
கடவுள் வணக்கம்
படைத்தலுடன் காத்தல் அழித்தலென மூன்றைக்
கடந்த தலைமை இறை.
மருதநிலத் தோற்றம்
இயற்கை நடனத்தை அங்கே மருதம்
அரசன்போல் பார்த்த தமர்ந்து.
தசரதன்மனக்குறை
தனக்குப்பின் நாடாள பிள்ளைகள் இல்லா
மனக்குறையைக் கூறினான் வேந்து.
வசிட்டர்கூற்று
புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்துவிட்டால்
புத்திரர்கள் உண்டென்றார் தேர்ந்து.
கலைக்கோட்டு மாமுனி யாகத்தைச் செய்தால்
பலனுண்டு என்றார் உணர்ந்து.
மாமுனியின்வருகை
மாமுனியைக் கண்டதும் மன்னன் தசரதன்
தானங்கே வீழ்ந்தான் பணிந்து.
யாகம்செய்தல்
மாசற்ற வேதத்தைச் சொல்லித்தான் மாமுனியும்
யாகம் தொடங்கினார் அங்கு.
வேள்வித்தீயில்இருந்து
பொன்தட்டில் நல்லமுதச் சோறுருண்டை வந்தது!
கண்கண்ட காட்சி இது.
முனிவன்கூற்று.
உருண்டையை வாங்கி முறையாய்ப் பகிர்ந்தே
தருகவென்று சொன்னார் கொடுத்து.
மன்னன்பிரித்தளித்தல்
கோசலை,கைகேயி மற்றும் சுமித்திரைக்கு
ஆசையுடன் தந்தான் பிரித்து.
பலபாடல்களின்சுருக்கம்
யாகம் முடித்தார்! சரயுநதி நீர்த்துறையில்
நீராட மூழ்கினான் நேர்ந்து.
மனைவியர் மூவரும்கருவுறுதல்
பட்டத் தரசியர் மூவர் கருவுற்றார்!
பற்றுடன் வாழ்ந்தார் சுமந்து.
குழந்தைகள்பிறந்தனர்
ராமன் பரதன் இலக்குவன் சத்துருக்கன்
நால்வர் பிறந்தனர் நன்கு
வளர்இளம்பருவம்
நால்வர் அயோத்தியில் நாளும் வளர்ந்திருந்தார்!
ஊரே பொழிந்தது வாழ்த்து.(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments