
வானம் வெளுத்து விடியலை பரப்பிக் கொண்டிருக்க மனிதர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்குச் செல்லவில்லை என்றால் அரைநாள் சம்பளம் கட்பபன்னி விடும் மேனேஜர் தொல்லை தாங்காமல் தப்பிக்க பரபரக்கும் மனிதர்களும்,பாடசாலைக்கு தாமதமாகி சென்றால் வகுப்பறைக்குள் விடாமல் வெளியில் நிறுத்தி வைத்து தண்டிக்கும் மாஸ்டரிடம் தப்பிக்க பரபரக்கும் பிள்ளைகளும் என்று காலைநேரம் வழமைபோல் சுழன்று கொண்டிருந்தது.
உமாவும் அவசர அவசரமாக எழுந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு தயார் படுத்தும்போது "அம்மா நாங்களும் உன்கூட வர்றோம் .இன்னிக்கு ஸ்கூல் போகமாட்டோம்"என்று இரண்டு பேரும் அடம்பிடிக்க
"வேண்டாம்" என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிள்ளைகள் கேட்பதாயில்லை.
கணவனை இழந்து சொந்த,பந்தங்கள் ஒதுக்கிவிடப்பட நிலையிலும்,வீடு வீடாகச் சென்று உழைத்து பிள்ளைகளை நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் தேவைகள் அனைத்தையும் முடிந்தவரை தீர்த்து வைப்பாள் உமா.
பிள்ளைகளை தயார் செய்யும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டு சென்று பார்த்தாள்.
அன்று பக்கத்து வீட்டில் இளையவளுக்கு திருமணம் என்று வேலைக்கு கூப்பிட்டிருந்தார்கள்.
அவர்கள் மிகவும் வசதி படைத்தவர்கள் சின்ன சின்ன வேலைகளுக்கும் உமாவை அழைப்பார்கள்.ஆனால் பிள்ளைகளை அழைத்துச் செல்வதில்லை.அவள் வேலை பார்க்கின்ற எந்த ஒரு இடத்திற்கும் அவர்களை அழைத்துச் செல்வதில்லை.
'தான் படுகின்ற கஷ்டத்தை அவர்கள் பார்க்கக் கூடாது.அவர்களுக்கு தன்னுடைய நிலைமை வரக்கூடாது 'என்பதற்காக பிள்ளைகளை அழைத்துச் செல்வதில்லை.அவர்களுக்கும் அது பழகிவிட்டது.
"அக்கா உங்கள அவசரமா அம்மா வரச்சொன்னாங்க." பக்கத்து வீட்டு பெரியவரின் இளைய மகன் சொன்னான்.
"சரி தம்பி இதோ வந்திர்றேன்."என்றவள்
"தம்பி நம்ம பிள்ளைங்க இரண்டுபேரும் வரணுமாம் .பரவாயில்லையா?"தயக்கத்தோடு கேட்டாள்.
சற்று யோசித்தவன் "பரவாயில்ல ,அங்க வந்து அமைதியா இருக்கணும்"என்று கூறிவிட்டுச் சென்றான்.
"அங்க வந்து எந்த குழப்பமும் செய்யக்கூடாது.அமைதியா இருக்கணும் .பெரிய இடத்து விசேஷம் .கவனமா இருக்கணும் "என்று பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி அழைத்துச் சென்றாள்.
பிள்ளைகளை ஓரமாக அமர வைத்து விட்டு தன் வேலைகளை தொடர்ந்தாள்
சமையல் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது.பெரிய இடத்து விசேஷம் என்பதால் மேலும் சில சமையல்காரர்களும் வந்திருந்தனர்.அவர்களோடு ஒன்றாக உமாவும் இயந்திரமாக வேலை செய்தாள்.
நேரம் ஓடிக்கொண்டிருக்க, பிள்ளைகள் பசியில் இருப்பார்கள் என நினைத்து அவர்களை விட்டுச் சென்ற இடத்திற்கு சென்றாள் உமா.
அதே இடத்தில் அப்பாவிகளாக சோர்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தார்கள் .
அவர்களுக்கு சற்றுத் தொலைவில் பெரிய இடத்துப் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அந்த சூழ்நிலையை பார்க்க உமாவுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.எனினும் சமாளித்துக்கொண்டு அங்கு பரிமாறப்பட்ட பழச்சாற்றை பிள்ளைகளுக்குக் கொடுத்து சற்று ஆருதல்படுத்திவிட்டுச் சென்றாள் உமா.
நேரம் செல்ல செல்ல அவ்வீட்டு பெண்ணுக்கு திருமண ஏற்பாட்டில் வீடே அலகோவியமென மின்னியது. அப்போது வருவோரையெல்லாம் இன்முகத்தோடு பன்னீர் விட்டு சிரித்து வரவேற்றனர்.
அங்கு எல்லாவற்றையுமே புதிதாக பார்த்து பூரித்து தனித்தே இருந்த பிள்ளைகளை விளையாட்டுக்கென சிறுவர் கூட்டம் அழைத்தபோது தாயின் அனுமதி இல்லாமல் முடியாது என்று நின்றவர்களை வழுக்கட்டாயத்தோடு அழைத்து சென்று விட
குழந்தைகளும் விரும்பியே புன்னகையோடு சந்தோசமாக விளையாடினார்கள்
அப்போது திடிரென ஏதோ கலவரமாகிட, என்ன ஏதென்று பார்க்கையில்
பெண்ணுக்காக வைத்த நெக்லசை காணவில்லை என வீட்டார்கள் பதறிக்கொண்டிருந்தார்கள்.
எங்கே வைத்தது, யாரும் கைமாறி வைத்து விட்டர்களா?..யாராவது திருடிவிட்டார்களா?என்ற கோணத்தில் தேடினார்கள்.
நேரம் செல்லச் செல்ல பதற்றம் அதிகரித்தது.வீட்டுப் பெரியவர் மனைவியை திட்டிக்கொண்டிருந்தார்.
"கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்கியே?"என கடுகடுப்பாகப் பேசினார்.
"நான் என்னங்க பண்றது" என்றவள் பரிதாபமாக அங்கும் இங்குமாக தடுமாறிக்கொண்டிருந்தாள்.
நல்ல நேரம் முடிய போவதாக சொல்லப்பட எல்லோருக்குமே பதற்றம் அந்நேரத்தில் உமாவின் மூத்த மகள் "நான் தான் எடுத்தேன்" என்று சிரித்துக்கொண்டே சொல்ல அங்கு பேரமைதி நிலவியது.
பாரிய யுத்தம் முடிந்து அமைதி நிலவுவதைப் போன்ற ஒரு சூழ்நிலை அங்கு காணப்பட்டது.
அத்தனை கண்களும் அந்தப் பிள்ளையை நோக்க உமா எதுவும் புரியாமல் கூனிக்குறுகி நின்றாள்.
அங்கு இருந்த அனைவரும் அவளை கேலியாக பார்த்து.
"தகப்பனிலாத புள்ளைங்க தானே அதுதான் இப்படி, வறுமை தாங்கல போல அது தான் பிள்ளைங்கிட்ட சொல்லிகூட்டி வந்திருப்பாள் போல, இல்ல அந்த பிள்ளைகளைப் பர்த்தால் அவ்வாறு தவறு செய்வது போல தெரியல" என பல கோணங்களில் முமுனுத்தார்கள்
"என்னடி சொல்றே?.நீ எடுத்தியா?"பிள்ளையை அதட்டிக் கேட்டாள் உமா.
பிள்ளையின் பதிலுக்குக் காத்திராமல் கண்டபடி அடித்தாள்.
"அம்மா அடிக்காதீங்க..வலிக்குது "என்று பிள்ளைகள் கதறியும் முடியைப்பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தாள்.
"பிள்ளையை அடிக்குறத நிறுத்துமா உன் ட்ராமவை வீட்டுல போயி நடத்து முதல்ல எங்க பொண்ணு நகையை எங்கேனு கேளு" என. அவ்வீட்டு பெண்மணி சொல்ல உமாவும் பிள்ளையை உழுக்கி "எங்க நகை"எனக் கேட்டதுமே பிள்ளை ஓர் இடத்தை நோக்கி கையைக்காட்டினாள்.
அங்கு நகைகள் பத்திரமாக இருந்தது.
"சரி சரி அப்றமா இத பேசலாம் இப்போது ஆக வேண்டயதை பார்ப்போம்"என ஒருவர் சொல்ல திருமண சடங்குகள் தொடங்கியது.
வீட்டுக்கு பிள்ளைகளை அழைத்து வந்து விட்டாள் உமா . அங்கு நடந்த யாவுமே கசந்தது. பிள்ளைகளும் அழுதுகொண்டே தூங்கிருந்ததனர்.
பிள்ளைகளைப் பார்க்கும்போது அவளுடைய நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்ததது.என்ன ஏது என்று விசாரித்துப் பார்க்காமல் அடித்துவிட்டோமே என நெஞ்சம் பதறியது.தன்னுடைய நிலைமையை நினைத்து தனிமையில் அழுதாள்.
திருமண வீட்டில் ஆளாளுக்கு கதைகட்டிக் கொண்டிருந்தார்கள்.
" ஏன் அந்த திருடியை விட்டிங்க போலீஸ்ல பிடிச்சு கொடுத்திக்கனும், இந்த வயசிலயே திருடுறாங்க" என வாய்க்கு வந்தபடியெல்லாம் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அதேநேரம் மூத்த மருமகள் "மாமி நான் உங்களிடம் தானே நகையெல்லாம் தந்தேன்.உங்க ஞாபகமறதில எங்கோ வச்சு அலுமாரி இடைல வீழ்ந்திருக்கு. அதத்தான் அந்த பிள்ளை கண்டு காட்டியும் தந்திருக்கு"என்று சொன்னதும் அங்கிருந்தவர்கள்அதிர்ந்தனர்.
"அந்தப்பிள்ளை திருடி இருக்க வாய்ப்பில்ல.ஏதோ நம்ம பக்கம்தான் தவறு நடந்திருக்கு.அப்படித் திருடி இருந்தா உண்மையை சொல்லிருக்காது.பாவம் "என்றார்கள்.
அநியாயமாய் சின்னப்பிள்ளையை திருடியாய் நினைத்ததையிட்டு தலைகுனிந்து நின்றார்கள்.
பிள்ளைகள் எழுந்ததும் கட்டி அணைத்தாள்உமா.
"ஏம்மா அடிச்சே?. நான் தப்பே செய்யலம்ம அந்த நகையை அங்க ஒரு அம்மா கொண்டு வந்து மறந்து போயிட்டாங்கம்மா. அதுதான் நான் பார்த்துட்டே இருந்தன்.அது கீழவீழ்ந்துச்சு யாருமே பார்கலம்மா. நான் தான் கண்டேன். அதனாலதான் யாரு எடுத்ததுனு கேட்டதாலே தான் மா முதலிலே சொல்லல்ல. நான் பார்த்ததால்தான் சொன்னம்மா. ஏன் மா அடிச்சிங்க. வலிக்குதும்மா" .என அப்பாவியாய் சொன்னாள் அந்தப் பிள்ளை.
உமாவுக்கு தூக்கிவாரிப்போட்டது.பிள்ளைகளிடம் எதுவும் விசாரிதுப்பார்க்காமல் அடித்துவிட்டோமே என்று அவளுடைய குற்ற உணர்வு அவளை வாட்டி வதைத்தது.
"பிள்ளைகள் திருடர்கள் இல்லை என்பது ஆண்டவனுக்கும் ,எனக்கும் தெரியும்" என்ற மகிழ்ச்சியில் பிள்ளைகளை இருக்க அணைத்துக் கொண்டு தூங்கிவிட்டாள் உமா.
சஹ்னாஸ் பேகம்
முதலைப்பாளி, புத்தளம்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments