
கண்ணம்மா கனவில்லையா
காதல் நினைவில்லையா?
தொடர்வில்லையா தூதுயில்லையா
தடையின் தொல்லையா ?
நடையின் எல்லையா
நாணம் விடவில்லையா ?
நானும் அலைக்க வில்லையா
நாளெல்லாம் தூக்கம் இல்லையா?
பாவம் பிறக்க வில்லையா
பாவியைப் பிடிக்கவில்லையா?
தேவை பெறவில்லையா
தேடினேன் வரவில்லையா?
கூடினால் குறையில்லையா
கூட்டங்கள் நமக்கில்லையா?
சல்லாபக் கவலையா
சொல்லாத நிலையா?
பேசிடவே விருப்பில்லையா
பேசாமைக்குத் தண்டனையா?
கேட்டவைகள் புரிய வில்லையா
பதிலுரைத்திட விரும்பமில்லையா?
நிறுத்தி நிதானித்துச் சொல்லிட
இன்னும் முடிவு எடுத்திடவில்லையா?
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments