
உவமைக் கவிஞர் சுரதா

"பார்சுரதா பாரின்பயன்"
சொல்புதிதாய்ச் சீர்தளையால் சொக்கவைக்கும் பாவலனே
வல்வினை தீர்க்க வடித்திழைத்தான்--
நெல்மணியாய்
நேர்நின்று நம்முள் நிறைவளிக்கும் நீரருவி
"பார்சுரதா"பாரின் பயன்:
ஜகதீஷ் சந்திரபோஸ்

"வாய்த்த ஜகதீஸ் வரம்"
(நேரிசை வெண்பா)
தாவரங்கள் நம்தோழர் தாழ்வில்லா நேயத்தால்
ஆவரம்பூ அண்ணாச்சி ஆர்த்திடுவீர்--
தேவரென
ஆய்ந்தே தெரிவித்த ஆற்றலின் தேர்வன்றோ
வாய்த்த ஜகதீஷ் வரம்:
தமிழ்

"வாய்மொழி ஈன்றவள்"
கலி மண்டிலம்
அடிகள் தோறும் 11 எழுத்துகள்:
"தாய்தான் எம்தமிழ் தாழ்ந்திடா தென்றுமே"
"சேய்கள் பேணியே சீர்தரும் முன்னிலை"
"ஆய்வில் தேர்வென ஆங்கவள் ஓங்குவாள்"
"வாய்மை எண்ணிலா வாய்மொழி ஈன்றவள்"
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments