
ஐரோப்பாவிலிருந்து "செருமன்" மொழியில் வெளி வருகின்ற வார இதழ் ஒன்று தமிழ்மொழி உலகின் பழைமையான மொழி என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது!
அந்த சஞ்சிகையில் இடம் பெற்றுள்ள உலகப் படத்தில் தமிழ் பேசுவோர் வாழும் இடம் என்று நேரடியாகவே இலங்கையை அம்புக்குறியிட்டுச் சுட்டிக்காட்டியிருப்பது, பழைமையான நாகரிகத்தைக் கொண்ட நாடு இலங்கை என்பதை வலியுறுத்துகின்றது.
சீனம், அறபு, பேர்சி மற்றும் அரமேயம் ஆகிய மொழிகளை மிகவும் பழைமையான மொழிகள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தமிழையும் அத்துடன் சேர்த்துள்ளமை தமிழ் மொழியை ஐரோப்பியர் எந்தளவுக்கப் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதைத்தான் கோடிட்டுக் காட்டுகின்றது.
இன்று பேச்சு வழக்கிலுள்ள உலகமொழிகளில் தமிழே முதன்மையானது என்று இந்தியக் கலைக் களஞ்சியம் மொழிகிறது.
எத்தனையோ மொழிகள் உருச்சிதைந்து அடையாளம் காணமுடியாமல் ஆகிவிட்ட நிலையிலும், பழைமைக்குப் பழைமையானதாயும், புதுமைக்குப் புதுமையானதாகவும் தமிழ் விளங்குகிறது.
பழைய நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழ்மொழி கடந்த 2500 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இலக்கிய வரலாற்றைக் கொண்டது.
இதன் பழமையான இலக்கணம் தொல்காப்பியமே; இது கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குரியதாகும். இதில் சொல்லப்படும் இலக்கணங்களுக்கு அடிப்படையான இலக்கியங்கள் எப்போது உருவாயின என்று இன்று வரை எவராலும் சொல்ல முடியாதுள்ளது.
மனித இனம் முதலில் தோன்றிய நிலப்பகுதியாக இந்தியாவின் தென்பகுதி கருதப்படுகின்றது; தென்பகுதியை அண்டி இலங்கை இருப்பதால், உலக முதன் மொழிகளுள் ஒன்றான தமிழ் இப்பிராந்தியத்தில்தான் புழக்கத்திலிருந்து வளர்ச்சி கண்டுள்ளது என்பது தெளிவாகின்றது!
ஐ.ஏ.ஸத்தார்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments